About Me

Saturday, June 18, 2011

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியிலேயே பதிவு செய்யலாம்

உதகை, ஜூன் 15:   நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புப் பதிவினை தங்களது பள்ளிகளிலேயே செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழ.தனபாலன் தெரிவித்துள்ளார்.÷இது தொடர்பாக மாவட்ட அவர் கூறியது: நீலகிரி மாவட்டத்தில் மேனிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை மேற்கொண்டதைப்போல,  நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அவரவர் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினை இணையதளம் மூலம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பதிவுகள் இம்மாதம் 20ம் தேதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே நீலகிரி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை அந்தந்த பள்ளி வளாகங்களிலேயே செய்து கொள்ளலாம். இதற்காக அவர்களது பள்ளியில் மாணவரின் தந்தையின் பெயர், தாயின் பெயர், முகவரி, இனம் மற்றும் சாதி சான்றிதழ், குடும்ப அட்டையின் எண் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் ஆகியவற்றை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். இம்மாதம் 20ம் தேதி பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்பட்ட உடனே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் தாமதமின்றி உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பெற தேவையான விவரங்களை முன்கூட்டியே தாங்கள் படித்த பள்ளியில் அளிக்க வேண்டும். நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 5ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டாலும் அனைவருக்கும் ஜூன் மாதம் 20ம் தேதி என்றே பதிவு மூப்பு வழங்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்காக நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டாமெனவும் மாவட்ட வேலைவாய்ப்புó அலுவலர் பழ.தனபாலன் தெரிவித்துள்ளார்.
                                          THANKS TO :



No comments: