About Me

Wednesday, June 29, 2011

மாணவர்களை அடித்தால் நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தீபக் என்ற மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் கண் பாதித்துள்ளதாக புகார் எழுந்தது. இது பற்றி மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.இதுபற்றி பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:​ மாணவர்களை அடித்து தண்டிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடிக்காமல் திருத்துவதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பள்ளி ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்களை முறைப்படுத்த வழி முறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் அதை பின்பற்றாமல் பிரம்பால் அடிப்பது, துன்புறுத்துவதை நியாயப்படுத்த இயலாது. மாணவர்களை அடித்து துன்புறுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு பள்ளிக்கூட விதிகள் 51-வது பிரிவு மாணவர்களை அடிக்கின்ற உரிமையை கொடுக்கிறது. அந்த விதி 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீக்கப்பட்டு விட்டது. எனவே மாணவர்களை அடிக்கின்ற உரிமை ஆசிரியர்களுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். 


நன்றி: http://www.crsttp.blogspot.com/

No comments: