About Me

Friday, July 29, 2011

SMS NEWS

SASTRA BED NEWS:


GO.NO.112 DATED 28.7.11
ELE.DIR.PRO.NO.22259/M2/2011, 28.7.2011,

COURT ORDER TO GIVE ALL BENEFITS.

சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்

சிறப்பு தற்செயல் விடுப்பு

அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.

ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.

இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20  நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது.

ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.

உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும். 

ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.

தற்செயல் விடுப்பு விதிகள்

தற்செயல் விடுப்பு
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய  தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர்  10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12  நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள். 17.1.83)

7.  குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள். 17.1.83)

வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள்

வரையறுக்கப்பட்ட விடுப்பு 

அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது. (அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )

ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். 


இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண். 118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87) 

thanks to kalvisolai

பள்ளிகளை இன்று புறக்கணிக்காதீர்' : அரசு உத்தரவு

மதுரை : பள்ளிகளை இன்று (ஜூலை 29) ஆசிரியர்களும், மாணவர்களும் புறக்கணிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் இன்று ஒரு நாள் பள்ளிகளை புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தி.மு.க.,வின் அழைப்புக்கு யாரும் ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதில் அரசும் உறுதியாக உள்ளது. இதனால் நேற்று டெலிபோன் உத்தரவாக அதிகாரிகள் பள்ளிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன்படி, இன்று பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் எக்காரணம் கொண்டு வராமல் இருக்கக் கூடாது. பள்ளிக்கு வந்தபின்பு வெளியே செல்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். யாரும் அவசிய காரணங்களை தவிர்த்து அனுமதி, விடுப்பு எடுக்கக் கூடாது,' என உத்தரவில் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை சமச்சீர் கல்விக்கு ஆதரவு கருத்துடைய ஆசிரியர், மாணவர்கள் இருந்தால்கூட தற்போதைய நிலையில் யாரும் வெளிப்படுத்த தயாராக இல்லை. அதேசமயம் துவக்கக் கல்வியில் ஒரு சில ஆசிரியர் கட்டணியினர் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு எதிரான நிலையில் இருப்பதால் அங்கு இப்பிரச்னை எழவில்லை.


புரஜெக்டர் மூலம் செயல்வழிக்கற்றல்: மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

ஈரோடு: செயல்வழிக் கற்றல் முறையை இன்னும் எளிமையாக்கி, நாடகத்தைப் படமாக்கி, மாணவர்களுக்கு புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பி, கல்வி கற்பிக்கும் முறை ஈரோடு ரயில்வே காலனி-ஐஐ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிமுகமாகியுள்ளது.

குழந்தைகள் ஓரிடத்தில் அமர்ந்து, கல்வி கற்பதை விரும்பாதவர்கள். இங்கும் அங்கும் ஓடியாடி, விளையாடுவதில் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களின் ஆற்றலை ஆக்கங்களாக்க, "அனைவருக்கும் கல்வி' இயக்கத்தில் செயல்வழிக்கற்றல் - கற்பித்தல் (ஏ.பி.எல்.,) களம் அமைத்துக் கொடுத்துள்ளது. காட்சிகள் எதுவும், குழந்தைகள் மனதில் எளிதல் பதிந்து விடும். இசையோடு கூடிய காட்சி என்றால், சொல்லவே வேண்டாம். பாடங்கள் வெறும் எழுத்தாகவும், சொல்லாகவும் இருப்பது குழந்தைகளுக்கு முரணாகவே இருந்தது. அதனால், பாடங்கள் பாடல்களாகவும், கதைகளாகவும், நாடகக் காட்சியாகவும் அட்டைகளில் அறிமுகமாகின. தற்போது, செயல்வழிக்கற்றல் முறை "சிடி'க்களாக மாறி, இன்று பள்ளிகளில் புரஜெக்டரில் ஒளிபரப்பாகும் அளவுக்கு, ஏ.பி.எல்., தரம் உயர்ந்துள்ளது. அதனொரு பகுதியாக, ஈரோடு ரயில்வே காலனி-ஐஐ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏ.பி.எல்., முறை, புரஜெக்டர் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 300 பேர் கற்கின்றனர். இங்கு செயல்வழிக்கற்றல் முறையில், நாடகமாக உள்ளதைப் படமாக்கி, புரஜெக்டரில் ஒளிபரப்பி மாணவ, மாணவிகளுக்கு கல்வி புகட்டுகின்றனர்.

தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பாடப்புத்தகம் வர தாமதம் ஆவதால், செயல்வழிக்கற்றல் பாடங்களை புரஜெக்டரில் கற்றுத் தருகிறோம். பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிக்கு மூன்று லேப்-டாப்கள், புரஜெக்டர் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் வாரியாக, வகுப்பு வாரியாக ஒளிபரப்புகிறோம். தவிர, அடிப்படைத் தமிழ், English Rhyms I & II, Art education, Radio english program, ABL Songs, Fun with English, Nursery rhyms, General Knowledge, Grandma Stories உள்ளிட்ட பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதே முறை கம்ப்யூட்டர் மூலம், ஒளிபரப்புகிறோம். மாணவ, மாணவிகள் சிறந்த முறையில், ஆர்வத்துடன் அமர்ந்து பார்த்து பரவசமடைகின்றனர். இவ்வாறு தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

thanks to  

Thursday, July 28, 2011

ஆசிரியர் / மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரை


http://www.scribd.com/doc/61138158/Advice-to-Teachers-and-Students-1

"மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்களே, கட்டுப்படுத்த வேண்டும்,'' என, பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சமச்சீர் கல்வித்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பள்ளி மாணவர்களை திரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி, போராட்டம் நடத்த மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்நிலையில், மாணவர்களை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி,

  • பள்ளி வரும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றவும், பள்ளி வளாகம் வந்த பின் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது.
  • பள்ளி நேரம் முடியும் வரை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தான் இருக்க வேண்டும். 
  • பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடையில் வெளியேறினால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரிகளால் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tuesday, July 26, 2011

CENTRAL TEACHER ELIGIBILITY TEST - JUNE 2011 (RESULT) 26.07.2011

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: ஆர்.டி.இ., சட்டம் காரணமாக அரசு நடவடிக்கை

கட்டாயக்கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடியாக, 8ம் வகுப்பிற்கான தனித்தேர்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இனி, 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படித்தால் மட்டுமே, நேரடியாக, 10ம் வகுப்பு தனித்தேர்வை எழுதமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டுவிட்டவர்களுக்கு படிக்கும் வாய்ப்பை தரும் வகையிலும், ஆண்டு தோறும் நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்தி வந்தது.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கும் இத்தேர்வை, 10 ஆயிரம் பேர் எழுதுவர். ரயில்வே துறையில், "கலாசி" வேலையில் சேர வேண்டுமெனில், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், துப்புரவு பணியாளர்களாக இருப்பவர்கள், பதிவு எழுத்தர் (ரெக்கார்டு கிளார்க்) நிலைக்கு உயர வேண்டுமெனில், 8ம் வகுப்பு தேர்ச்சி முக்கியம். டிரைவர் லைசென்ஸ் எடுப்பதற்கும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படி, பல நிலைகளில், 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியமாக உள்ளது. இதற்காகவே, ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

 இந்நிலையில், 2009ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயக்கல்வி சட்டத்தை கொண்டுவந்து, நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில், "அனைத்து வகையான பள்ளிகளிலும், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் தோல்வியடையச் செய்யக்கூடாது. அனைவரையும், 8ம் வகுப்பு வரை, தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது, பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்வதில்லை.

நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி என தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டியிருக்கும். எனவே, கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, நேரடி, 8ம் வகுப்பு தனித்தேர்வை நடப்பாண்டு முதல் ரத்து செய்துள்ளதாக, துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "கடந்த ஆண்டே தேர்வு நடத்தியிருக்கக் கூடாது. ஆனால், நடத்திவிட்டதால் வேறு வழியின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் கொடுத்துவிட்டோம். இந்த ஆண்டு முதல், 8ம் வகுப்பிற்கு நேரடி தனித்தேர்வு நடைபெறாது' என்றார்.

அரசு தற்போது எடுத்துள்ள முடிவு காரணமாக, நேரடியாக, 8ம் வகுப்பு தேர்வை எழுத திட்டமிட்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேரடியாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வழியில்லை. எனவே, 8ம் வகுப்பு படிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்க வேண்டும்; வேறு வழியில்லை. அப்படி, பள்ளிகளில், 8ம் வகுப்பு படித்து முடித்துவிட்டால், அதன்பின் நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வையும், பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம்.

நன்றி


Saturday, July 23, 2011

டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது!






மேட்டுப்பாளையம்: "டிப்-டாப்' சீருடை, லேப்-டாப் கம்ப்யூட்டர், பவர்-பாயின்ட் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் என அசத்துகின்றனர், அந்த பள்ளியின் மாணவர்கள். இவர்கள் யாரும் ஊட்டி சர்வதேச பள்ளிகளில் படிக்கவில்லை... கோவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் தான். தனியார் பள்ளிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு "ஹைடெக்' ஆக வளர்ந்து வருகிறது, இந்த பள்ளி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாணவர்கள் அழகான சீருடை அணிந்து, மிடுக்கான தோற்றத்துடன், பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், பவர் பாயின்ட் புரோஜக்டரில் ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியை கஜலட்சுமி கூறியதாவது:
இப்பள்ளியில் காந்தவயல், காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் மற்றும் லிங்காபுரத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். மொத்த மாணவர்களில், 50 சதவீதம்பேர் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள். நன்கொடை பெற்று அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கை, நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் திறன் வளர்க்க அறிவியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ளன. "டிவிடி' புரோஜக்டரில் திரையிட்டு கற்பிக்கப்படுவதால், நன்கு ஆங்கிலம் கற்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வம் குறையாமல் வருகின்றனர். வாழ்க்கை கல்வியை வளப்படுத்தும் வகையில் களப்பயணம், யோகா, ஸ்போக்கன் இங்க்லீஷ், ஓவியப் பயிற்சி, இசையுடன் கூடிய கூட்டு உடற்பயிற்சி, கணிதக் கல்வி, தியானம், ஆடல்பாடல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள், "சந்திராயன்' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பரிசு பெற்றனர். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெற்று கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று டெஸ்க் டாப், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கி, மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருகிறோம். இவ்வாறு, தலைமை ஆசிரியை கஜலட்சுமி கூறினார்.
பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,""ஆசிரியர்களின் கடும் முயற்சியால், இன்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லி கொடுப்பதால், மூன்று மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு 79 பேர் படித்தனர். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. ஊர் மக்கள் ஒத்துழைப்பும், கல்விக்குழு உறுப்பினர்கள் ஆதரவும் நன்றாக இருப்பதால், இப்பள்ளி நல்ல முறையில் வளர்ந்து வருகிறது,'' என்றார்.