About Me

Friday, July 29, 2011

புரஜெக்டர் மூலம் செயல்வழிக்கற்றல்: மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

ஈரோடு: செயல்வழிக் கற்றல் முறையை இன்னும் எளிமையாக்கி, நாடகத்தைப் படமாக்கி, மாணவர்களுக்கு புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பி, கல்வி கற்பிக்கும் முறை ஈரோடு ரயில்வே காலனி-ஐஐ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிமுகமாகியுள்ளது.

குழந்தைகள் ஓரிடத்தில் அமர்ந்து, கல்வி கற்பதை விரும்பாதவர்கள். இங்கும் அங்கும் ஓடியாடி, விளையாடுவதில் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களின் ஆற்றலை ஆக்கங்களாக்க, "அனைவருக்கும் கல்வி' இயக்கத்தில் செயல்வழிக்கற்றல் - கற்பித்தல் (ஏ.பி.எல்.,) களம் அமைத்துக் கொடுத்துள்ளது. காட்சிகள் எதுவும், குழந்தைகள் மனதில் எளிதல் பதிந்து விடும். இசையோடு கூடிய காட்சி என்றால், சொல்லவே வேண்டாம். பாடங்கள் வெறும் எழுத்தாகவும், சொல்லாகவும் இருப்பது குழந்தைகளுக்கு முரணாகவே இருந்தது. அதனால், பாடங்கள் பாடல்களாகவும், கதைகளாகவும், நாடகக் காட்சியாகவும் அட்டைகளில் அறிமுகமாகின. தற்போது, செயல்வழிக்கற்றல் முறை "சிடி'க்களாக மாறி, இன்று பள்ளிகளில் புரஜெக்டரில் ஒளிபரப்பாகும் அளவுக்கு, ஏ.பி.எல்., தரம் உயர்ந்துள்ளது. அதனொரு பகுதியாக, ஈரோடு ரயில்வே காலனி-ஐஐ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏ.பி.எல்., முறை, புரஜெக்டர் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 300 பேர் கற்கின்றனர். இங்கு செயல்வழிக்கற்றல் முறையில், நாடகமாக உள்ளதைப் படமாக்கி, புரஜெக்டரில் ஒளிபரப்பி மாணவ, மாணவிகளுக்கு கல்வி புகட்டுகின்றனர்.

தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பாடப்புத்தகம் வர தாமதம் ஆவதால், செயல்வழிக்கற்றல் பாடங்களை புரஜெக்டரில் கற்றுத் தருகிறோம். பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிக்கு மூன்று லேப்-டாப்கள், புரஜெக்டர் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் வாரியாக, வகுப்பு வாரியாக ஒளிபரப்புகிறோம். தவிர, அடிப்படைத் தமிழ், English Rhyms I & II, Art education, Radio english program, ABL Songs, Fun with English, Nursery rhyms, General Knowledge, Grandma Stories உள்ளிட்ட பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதே முறை கம்ப்யூட்டர் மூலம், ஒளிபரப்புகிறோம். மாணவ, மாணவிகள் சிறந்த முறையில், ஆர்வத்துடன் அமர்ந்து பார்த்து பரவசமடைகின்றனர். இவ்வாறு தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

thanks to  

No comments: