About Me

Tuesday, August 16, 2011

பிஎச்.டி.யில் சேர தொலைதூரக் கல்விப் பட்டம் செல்லாது-16-08-2011

"தொலை தூரக் கல்வி மூலம் படித்த முதுகலை படிப்பை, பிஎச்.டி., படிப்புக்கு தகுதியாக அனுமதிக்க முடியாது என, அண்ணா பல்கலை பிறப்பித்த உத்தரவு செல்லும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை அண்ணா பல்கலையில், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜன் என்பவர் பிஎச்.டி., படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், தொலைதூரக் கல்வி மூலம், முதுகலை பட்டம் பெற்றுள்ளதால், பிஎச்.டி., படிப்பில் சேர, நடராஜனுக்கு தகுதியில்லை என, ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் நடராஜன் மனுத் தாக்கல் செய்தார். பிஎச்.டி., படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.
மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்த சுற்றறிக்கையில், தொலை தூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், முதுகலை பட்டங்கள், பட்டயங்களை அங்கீகரிக்கக் கூடாது என, கொள்கை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதே நிலையை உறுதி செய்து, மார்ச்சில் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த முடிவு, அண்ணா பல்கலையை கட்டுப்படுத்தும். மனுதாரரை பிஎச்.டி., படிப்புக்கு அவரை சேர்க்காதது நியாயமானது.
எனவே, ஆய்வு மையத்தின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முகாந்திரமில்லை. அந்த உத்தரவு செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments: