About Me

Friday, August 26, 2011

தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-மேலும் 4 மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமனம்

 
டெல்லி: தமிழக ஆளுநராக சில மாதங்களுக்கு முன்பு வரை ஆந்திர மாநில முதல்வராக இருந்து வந்த கே. ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று பிறப்பித்தார்.

எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம்

குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை இன்று மாலை வெளியிட்டது.

ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ரோசய்யா 2009ம் ஆண்டு

செப்டம்பர் 3ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். பின்னர் உள்கட்சிப் பூசல் காரணமாக

பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவரை சமாதானப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவியைக் கொடுக்கிறது காங்கிரஸ்.

கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் இருந்தவர் ரோசய்யா. என்.ஜி.ரங்காவின் சிஷ்யர் ஆவார்.

சென்னா ரெட்டி, அஞ்சய்யா, விஜயபாஸ்கர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கியப் பதவிகளை

வகித்துள்ளார். 1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர்.

சாதனை அளவாக 16 முறை ஆந்திர பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ரோசய்யா.

1998ம் ஆண்டு லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருந்துள்ளார். 1995ம் ஆண்டு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி

வகித்துள்ளார்.

தற்போது ரோசய்யா ஆந்திர மாநில மேல்சபையில், எம்.எல்.சியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவுக்கு எம்ஓஎச் பாரூக்

இதேபோல கேரள மாநில ஆளுநராக எம்.ஓ.எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கிறார்.

ஜார்க்கண்ட் ஆளுநராக டாக்டர் சையத் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

மிஸோரம் மாநில ஆளுநராக வக்கம் புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர ஆளுநர் சங்கரநாராயணன், கூடுதல் பொறுப்பாக கோவாவையும் பார்த்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச ஆளுநராக ராம் நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: