பள்ளிக் கல்வித்துறை செய்முறைத் திட்டம் மற்றும் புள்ளிவிவர கையேடு, சட்டசபையில் நேற்று உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்தின் கல்வி நிலையை விளக்கும் வகையில், பல்வேறு புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விவரம்:
- நடப்பாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை-7 கோடியே 21 லட்சம்.
- மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதம் - 80.33 (ஆண்கள் - 86.81, பெண்கள் - 76.86)
- கன்னியாகுமரி மாவட்டம், 92.14 சதவீதம் எழுத்தறிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடம் சென்னைக்கு (90.33%) கிடைத்துள்ளது.
- 64.71 சதவீதத்துடன், தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களில், முறையே அரியலூர் (71.99%), விழுப்புரம் (72.08%) மாவட்டங்கள் உள்ளன.
- தொடக்கப்பள்ளிகள் 34 ஆயிரத்து 226, நடுநிலைப்பள்ளிகள் 10 ஆயிரத்து 614, உயர்நிலைப் பள்ளிகள் 4,557, மேல்நிலைப் பள்ளிகள் 5,560 என மொத்தம், 54 ஆயிரத்து 957 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடக்க கல்வித்துறையில், 54 லட்சத்து, 98 ஆயிரத்து 419 மாணவர்களும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 81 லட்சத்து 22 ஆயிரத்து 678 மாணவ, மாணவியரும் படிக்கின்றனர்.
- 31 ஆயிரத்து 816 அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் உள்ளன என்றும், 3,979 பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன என்றும், அரசு தெரிவித்துள்ளது. 16 ஆயிரத்து 75 வகுப்பறைகள் கூடுதலாக தேவைப்படுகின்றன. இதில், 4,444 வகுப்பறைகள், நடப்பு கல்வியாண்டில் கட்டப்பட உள்ளன.
- 14 ஆயிரத்து 836 பள்ளிகளில் தளவாட சாமான்கள் முழுமையாக உள்ளன. 14 ஆயிரத்து 16 பள்ளிகளில், ஓரளவுக்கு உள்ளன. 6,943 பள்ளிகளில், தளவாட சாமான்களே இல்லை என்றும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2,248 பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
- 1,510 பள்ளிகளில் குடிநீர் வசதி, பயன்பாட்டில் இல்லை.
இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, நடப்பு கல்வியாண்டில் 1,820 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராப் பகுதிக்கு...
அரசு பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள்
- 33,547 பள்ளிகளில் கழிவறை வசதி உள்ளது.
- 31,010 பள்ளிகளில் உள்ள கழிவறைகள் முழு பயன்பாட்டில் உள்ளன.
- 2,537 பள்ளிகளில், மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.
- 2,248 பள்ளிகளில் கழிவறை வசதியே கிடையாது.
குடிநீர்:
- 31,710 பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது.
- 4,085 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.
சுற்றுச்சுவர்:
- 10,190 பள்ளிகளில் முழுமையான அளவிற்கு சுற்றுச்சுவர் உள்ளது.
- 11,820 பள்ளிகளில் பகுதியாக சுற்றுச்சுவர் உள்ளது.
- 13,785 பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை.
- நடப்பு கல்வியாண்டில், 2,625 பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது.
No comments:
Post a Comment