About Me

Thursday, August 18, 2011

ஒளிமயமான எதிர்காலம்...

ஒளிமயமான எதிர்காலத்தின் மீது தான் அனைவருக்கும் விருப்பமிருக்கிறது. ஆனால் அது யாருக்கெல்லாம் வாய்க்கிறது. எல்லோருக்குமா?யோசிப்போம். எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரின் ஒரு செய்கை மிக மிக வித்தியாசமானது. ஆனால் தன்னம்பிக்கை நிறைந்தது. ஆச்சர்யப்பட வைப்பது. முக்கியமாய், அனைவருக்கும் தேவையானது.

அவர் என்ன செய்வார். தனது மொபைல் போன் reminder ல் - பின் தேதியிட்ட காசோலை தருவதை போல - தன்னால் எதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கணக்கிட்டு, அந்த காலம் முடிகின்ற சமயம் reminder ல், தான் "முடிக்க நினைத்த அனைத்தையும் எழுதி வைத்து - முடித்து விட்டேனா?" என்று கேள்வியும் கேட்டு வைப்பார். சரியாக remimder அந்த நாளில், அந்த நேரத்தில் அலாரம் ஒலிக்கும்.

அவருக்கே தான் பதிந்து வைத்தது மறந்து தான் இருக்கும். ஆனால் அவரின் வேலை, கடமை, இலக்கு - இவை மட்டுமே ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும். இப்படி எழுதி வைக்க துவங்கியதில் இருந்து - எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பதாக சொன்னார். எலக்ட்ரானிக் உபகாரணங்களை எப்படி எல்லாம் நம் வசதிக்கேற்ப்ப நன்மை பயக்கின்ற வகையில் உபயோகிக்க முடிகிறது பாருங்கள்.

"எனக்கு இப்படி செய்வது சுவராஸியமானதாக, என்னை மகிழ்விக்கின்ற வகையில் இருப்பதாக" தெரிவித்தார். "reminder ல் நிறைய விஷயங்கள் இருக்கும். இந்த மாதிரியான விஷயத்திற்காக reminder அலாரம் ஒலிக்கும் போது - நினைத்ததெல்லாம் நடந்துவிட்டதை அறிகின்ற போது எழுகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்றார். அவர் ஒரு பிஸ்னஸ்மேன் என்பதால், அவருக்கு ஏதேனும் டார்க்கெட் டார்ச்சர் இருந்து கொண்டே இருக்கும்.

அவராக ஒரு இலக்கை நிர்ணயம் செய்து - reminder ல் பதிந்து விடுவார். இப்போது நானும் அவர் வழி நடக்க துவங்கி உள்ளேன். உண்மையில் சுவராஸியம் நிறைந்ததாக தான் உள்ளது. நமக்கு நாமே வைத்து கொள்ளும் பரிட்சை என்று கூட சொல்லலாம். நாமே ஆசிரியராக, நாமே கேள்வியாக... நாமே மாணவராக, நாமே பதிலாக... தேர்வில் தவறினால் கூட, சின்ன சின்ன சுயபரிசோதனை மூலம் நம்மை திருத்தி கொள்ளலாம். தேர்வானால் நம்மை நாமே தட்டியும் கொடுத்து கொள்ளலாம்.

எங்கே வெற்றி எப்படி கிடைக்கும் என்பதை தற்காலத்தில் சொல்வதற்கில்லை. தூங்கும் போது கூட பணி குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது. இம்மாதிரியான செயல்பாடுகள் நமக்கு ஒரு ஆசையை, மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. விதவிதமாக ஆடைகள் அணிய விரும்புகிறோம் - நாம் அழகாக இருக்க. விதவிதமான பதார்த்தங்கள் சாப்பிட ப்ரியப் படுகிறோம் - நம் ஆரோக்கியதிற்காக மற்றும் சுவைக்காக ... வித விதமான சிந்தனை, முயற்சி செய்யவது - நாம் வெற்றியாளனாகவே இருக்க... நம் இடத்தை யாரும் பறித்து விடாமல் இருக்க. எந்த திட்டத்துக்குமே ஒரு கால நிர்ணயம் உள்ளது.

எனது நண்பர் டீக்கடை துவங்கினார். கடை திறந்த சில மாதங்கள் கழித்து ஒரு நாள் - சாலையில் சென்று கொண்டிருந்த என்ன அழைத்து கேக் கொடுத்தார். "என்ன விசேஷம்" என்று கேட்டேன். "இன்றோடு கடை ஆரம்பித்து நூறு நாளாயிடுச்சு" என்றார். ஆச்சர்ப்பட்டு "அதற்காகவா கேக்" என்று கேட்டேன்.

"இல்லை" என்று சொன்னவர் - மேலும் ஒரு தகவல் சொன்னார். அது தான் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தியது. "ஆரம்பிச்ச டீக்கடை பிழைக்குமா, பிழைக்காதா என்பதை நூறு நாட்கள்ல சொல்லிடலாம். அந்த வகையில் நா ஜெயிச்சிட்டேன், இனி கவலை இல்ல" என்றார். அவர் - இந்த கருத்தை சொல்லி எட்டு வருஷங்கள் ஆயிற்று. இன்று சிறியதாக இருந்த தன் கடையை விரிவு படுத்தி, டிபன் ஹோமும் துவங்கி விட்டார்.




வெற்றியை வசமாக்கி கொண்டவர்களை நண்பர்களாக பெற்றவர்கள் பாக்யசாலிகள் என்று சொல்லலாம். காரணம் - ஆயிரம் நூல்கள் கற்று தராத பாடத்தை, அவர்களின் சிறு அசைவுகள் கற்று தருகிறதே. அந்த வகையில் நானும் பாக்யசாலி.

No comments: