About Me

Wednesday, September 21, 2011

அக்,17, 19-ல் தேர்தல் ; அக்.21-ல் ரிசல்ட் : முழு விபரம்

புதன்கிழமை, 21, செப்டம்பர் 2011 (20:36 IST)







உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று(21.9.2011)  இரவு 8.15க்கு வெளியிடப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்,    மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமையில்
நேற்று மாலை நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

 
இந்த நிலையில் ஐகோர்ட்டின் தீர்ப்பு இன்று வெளியானது. திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர்
பேரூராட்சியை இணைத்தது செல்லாது என ஐகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்தது.  

ஐகோர்ட் தீர்ப்பு வந்ததால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டது.    மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் இரவு 8.15க்கு அறிவித்தார்.

  உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக  நடைபெறுகிறது.  அக்டோபர் 17.10.2011, மற்றும் 19 .10.2011
-ந்தேதிகளில் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவில் அனைத்து மாநகராட்சிகளும் வந்துவிடும்.  வாக்கு எண்ணிக்கை  21.10.2011அன்று ஒரே கட்டமாக நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் நாளை 22.9.2011 முதல் தொடங்குகிறது.  மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர்
29.9.2011.   செப்டம்பர் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.   மனு திரும்பப்பெற கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி. 

புதிய மேயர், நகராட்சி, பேரூராட்சி  தலைவர்கள் 25ம் தேதி பதவி ஏற்பார்கள்.
தமிழகத்தின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


முதன்முறையாக அகில இந்திய அளவில் ஆன் லைன் மூலமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் வழங்கப்படும்.  இதனை அரசு பணியாளர்கள் மட்டுமே
வழங்குவர்.

ஒரு வாரத்திற்கு முன்பே பூத் சிலிப் வாக்காளர்களின் வீட்டிற்கு வந்து சேரும்.   வாங்கிக்கொண்டமைக்கு
சாட்சியாக கையெழுத்து வாங்கப்படும்.வாக்குப்பதிவு நாளன்றும் பூத் சிலிப் வழங்கப்படும்.

சட்டமன்ற தேர்தலில் என்னென்ன நடைமுறைகள் பின் பற்றப்பட்டனவோ அதே நடைமுறைகள்தான்
பின்பற்றப்படும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் இனி இலவச பொருட்கள் விநியோகிக்கக்கூடாது.


thanks :Nakkeran.












No comments: