சென்னை: சென்னை பாரதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கிட்டத்தட்ட 3000 பேர் இன்று காலை பிராட்வே பகுதியில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் சாலைப் போக்குவரத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டு, வட சென்னைக்கான போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னை பாரதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கிட்டத்தட்ட 3000 பேர் இன்று பிராட்வே பஸ் நிலையப் பகுதியில் திரண்டனர். மாணவிகள் பெருமளவில் திரண்டு வந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாணவிகள் அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். மாணவிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்டனர்.
அப்போது மாணவிகள், கல்லூரியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அவற்றை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்துவதாக கூறி கல்லூரி நி்ர்வாகத்தைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக பிராட்வே பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வட சென்னைக்கான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் தேங்கி நிற்கின்றன.

No comments:
Post a Comment