About Me

Thursday, September 8, 2011

அரசு பள்ளியில் கலெக்டர் அதிரடி சோதனைதலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் மீது நடவடிக்கை

கடலூர்:பணி நேரத்தில் பள்ளியில் இல்லாத 5 ஆசிரியர்கள் மற்றும் வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில்
ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை தினமும் காலை 10 மணிக்குள் எஸ்.எம்.எஸ்., மூலம் ஆன் லைனில் பதிவு செய்ய கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டார்.

சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் சில ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன.
இதற்கு கடந்த 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் அமுதவல்லி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில், பட்டதாரி ஆசிரியர் ரெஜி (தாவரவியல்) வருகைப் பதிவேட்டில் "பிரசன்ட்' போடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பணியில் இல்லை.அதேப் போன்று பட்டதாரி ஆசிரியர் காமராஜ் (வரலாறு), கம்ப்யூட்டர் ஆசிரியர் சங்கீதா, முதுநிலை ஆசிரியர் ஜெயந்தி (இயற்பியல்), இடைநிலை ஆசிரியர் ஜோதிமணி ஆகியோரின் வருகைப் பதிவேட்டில் எதுவும் குறிப்பிடாமல் இருந்தது.விசாரணையில் ஆசிரியர்கள் ரெஜி, சங்கீதா, காமராஜ் ஆகியோர் அயல் பணிக்குச் சென்றுள்ளதாகவும், ஜெயந்தி, ஜோதிமணி ஆகியோர் விடுமுறை என தலைமை ஆசிரியர் கூறினார். ஆனால், அதற்கான கடிதம் எதுவும் இல்லை.கலெக்டர் ஆய்வின் போது பணியில் இல்லாமல் இருந்த ஐந்து ஆசிரியர்கள் மீதும், வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்காத தலைமை ஆசிரியர் கனகசபை மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ.,விற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை மாவட் டத்தில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: