About Me

Saturday, September 10, 2011

கணிதப் பாடத்திற்கு நாட்கள் போதாது: ஆசிரியர்கள் புலம்பல்

மதுரை: சமச்சீர் கல்வியில் பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தை நடத்த போதுமான பாடவேளைகள் இல்லையே, என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சமச்சீர் கல்வியில் பத்தாம் வகுப்பு கணிதத்தில், 12 பாடங்கள் உள்ளன. இவற்றை 255 பாட வேளைகளில் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயலாத காரியம் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். கல்வி ஆண்டில் ஜூன் 1 முதல் ஏப்., 23 வரை 210 நாட்கள் பள்ளிகள் நடைபெறும். இதில் தேர்வுகளுக்கு 24 நாட்கள், உள்ளூர் விடுப்பு 3 நாட்களை கழித்து விட்டால் 183 நாட்கள் உள்ளன. ஒரு வாரத்தின் 5 நாட்களில், ஒரு பாடத்திற்கு 7 பாட வேளைகள்தான் ஒதுக்கப்படும். 183 நாட்களுக்கு முப்பத்தாறரை வாரம். இதன்படி ஏப்., 23 வரை வகுப்புகள் நடந்தால்தான் கணித பாடத்தை நடத்த முடியும். ஆனால் வழக்கமாக அரையாண்டு தேர்வுடன் பாடம் முடிந்துவிடும். அதன்பின் திருப்புதல் தேர்வும், இந்த ஆண்டு புதிதாக அறிமுகமாகியுள்ள செய்முறை தேர்வும் நடத்த வேண்டும். ஏப்., 23க்கு பதில் ஒரு மாதம் முன்னதாக மார்ச்சிலேயே ஆண்டு இறுதித் தேர்வு துவங்கிவிடும். இதை கணக்கிட்டுப் பார்த்தால், சாதாரண ஆண்டுகளிலேயே கணிதத்தை நடத்தி முடிக்க இயலாது. அதிலும் இந்த கல்வி ஆண்டு 75 நாட்கள் தாமதமாகிவிட்ட நிலையில் சாத்தியமே இல்லை. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி, மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், &'கணித பாடத்தில் குறிப்பிட்டுள்ளபடி அப்பாடத்தை ஒரு ஆண்டில் நடத்த இயலாது என்பது உண்மைதான். இதுகுறித்து ஆசிரியர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்&' என்றனர்
 .

No comments: