About Me

Sunday, October 9, 2011

போலி மாணவர்கள் பட்டியல்: ஆயிரம் கோடி ஊழல்

மும்பை: மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக காட்டி கோடிக்கணக்கில் பணம் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் ரோல்பட்டியலில் அதிகரித்து
காட்டப்பட்டு அதற்கான பண உதவியும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு நடந்த ஊழல் தொடர்பான சோதனையில் நந்தடு மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 500 பள்ளிகளில் 7 லட்சம் மாணவர்கள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் போலியானவர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது . இது தொடர்பான விசாரணை இன்னும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த வகையில் முறைகேடு தொகை ஆயிரம் கோடியை எட்டும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சோதனை நடந்தபோது காலையில் இருந்த மாணவர்கள் மதியம் மாற்று பள்ளியில் கணக்கிற்காக காட்டப்பட்டுள்ளனர்

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: