About Me

Wednesday, October 19, 2011

அனைத்து அரசு பள்ளிகளிலும், அடுத்த மாத இறுதிக்குள், கழிப்பறை வசதி சுப்ரீம் கோர்ட்உத்தரவு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், அடுத்த மாத இறுதிக்குள், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்" என, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதி டி.கெ.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து அரசு பள்ளிகளிலும், குறிப்பாக, பெண்கள் படிக்கும் பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், இந்த உத்தரவை, அடுத்த மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், தற்காலிக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள், நிரந்தர கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து, அனைத்து மாநில அரசுகளும், விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்கு முன், தங்களின் பதிலை தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டியது, அரசின் கடமை. கழிப்பறை வசதி இல்லையெனில், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். இவ்வாறு நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

No comments: