About Me

Friday, October 7, 2011

வாக்களிக்க "பூத் சிலிப்" மட்டும் போதும்தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை

பெ.நா.பாளையம்: ""உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க "பூத் சிலிப்' கொண்டு வந்தால் போதும். அவை முதல் படிப்படியாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும்'' என பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தேர்தல் அலுவலர் ராணி கூறினார்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள்
மற்றும் ஓட்டுச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்தது. இதில், எண்.24 வீரபாண்டி, சோமையம்பாளையம், சின்னதடாகம், பிளிச்சி, பன்னிமடை, அசோகபுரம், நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளில் நடக்கும் தேர்தலில் பங்கேற்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவுக்கு வேண்டிய தேர்தல் சாதனங்கள் மண்டல அலுவலரால் வழங்கப்படும். தேர்தல் அலுவலர்கள் முந்தைய நாள் பகல் 12 மணிக்கு ஓட்டுச்சாவடிக்கு வந்து விட வேண்டும். வாக்குப்பதிவு நாளான்று காலை 6 மணிக்கு ஓட்டுச்சாவடியில் பணியில் இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தவிர்க்க வாக்காளர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை சரிபார்த்து வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு நடக்கும் போதும், முடிந்த பின்னரும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்கள் வசம் உள்ள குறியீட்டு படியினை சரிபார்த்து எத்தனை வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும், அவர்களில் ஆண்கள், பெண்கள் எவ்வளவு என்பதையும் கணக்கிட வேண்டும்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்படும் அலுவலர்கள் தங்களது வாக்கினை ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிகளின்படி அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தேர்தல் அலுவலர் ராணி கூறுகையில்,"" வாக்களிக்க "பூத் சிலிப்' மட்டும் போதும். ஓட்டுச்சாவடியில் உள்ள அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்ட வேண்டும். வாக்காளர்களுக்கான பூத் சிலிப் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களால் இன்று 7ம் தேதி முதல் படிப்படியாக வழங்கப்படும்'' என்றார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி அம்மாசை, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்குப் பெட்டியை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மட்டும் அதிகளவில் ஈடுபடுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

No comments: