சமச்சீர் கல்வி இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆனால் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நிறைய பிழைகள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நிறைய பிழைகள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஒரு பகுதியினர், சமச்சீர் கல்வி புத்தகம் தரமானதாக இல்லை என்றும் குறை கூறிவருகின்றனர்.
இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்குமான சமச்சீர் கல்வி புத்தகங்களில் இடம் பெற்றுள்ள முரண்பாடான தகவல்கள், பிழைகள் ஆகியவற்றை நீக்குவதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1200 ஆசிரியர்கள் முதல் 1500 ஆசிரியர்கள் என அனைத்து மாவட்டத்திலும் இருந்து மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையின் கீழ் பிழைகள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து பாட ஆசிரியர்களும் ஒவ்வொரு வகுப்பு பாடப்புத்தகங்களை வரிவரியாக படித்துப் பார்த்து, அதில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் பட்டியல்களில் குறிப்பிடப்படும் பிழைகள் மீதான கருத்துக்களை சென்னையில் உள்ள வல்லுனர் குழு ஆய்வு செய்யும். இறுதி முடிவுக்கு பிறகு பாடத்தில் இடம் பெறும். இந்த பணியை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ஜனவரி 30ம் தேதிக்கு பிறகு திருத்தப்பட்ட புதிய பாடப்பகுதிகள் சிடிக்களாக தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு வழங்கப்படும். அதற்கு பிறகே புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தொடங்கும். இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் பருவமுறை வர உள்ளதால், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி புத்தகம் அச்சிடவும் அரசு முடிவு செய்துள்ளது.
|
No comments:
Post a Comment