தேர்வாகியும், பணி நியமனம் கிடைக்காமல், பல மாதங்களாக புலம்பி வந்த பட்டதாரி ஆசிரியர்களில், சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் உள்ளிட்ட 181
பேரைத் தவிர, மீதமுள்ளவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை பணி நியமன உத்தரவு அனுப்பி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு முன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 2,804 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்குள், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலுக்குப் பின், சான்றிதழ் பிரச்னை காரணமாக 24 பேரும், சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்களின் தேர்வுப் பணிகள் முடியாததால், இதற்கான, 157 பணியிடங்கள் தவிர, மீதமுள்ள 2,623 பணியிடங்களுக்கான தேர்வானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.ஆனாலும், இவர்களுக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில், 2,623 பேரையும் பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன.மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில் பெரும்பாலானோரும், மீதமுள்ளவர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப் பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment