About Me

Thursday, March 8, 2012

ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: 22ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.


* கடந்த 2010, ஆக., 23ம் தேதிக்குப் பின், அரசு, அரசு நிதியுதவி, தனியார் என எந்தப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவரானாலும், ஆசிரியர் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

* ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என விரும்புபவர்களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும் இத்தேர்வை எழுத வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதல் தாள் தேர்வையும்; பட்டதாரி ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் மற்றும் இந்தப் பணிக்கு வர விரும்புபவர்கள், இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.

* இடைநிலை மற்றும் பட்டதாரி என, இரு வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பணி செய்ய விரும்புபவர்கள், இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

* கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், "அப்ஜக்டிவ்' முறையில் இருக்கும். தலா, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற வேண்டும்.

* விண்ணப்பம் விலை, 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய். இரு தாள் தேர்வுகளை சேர்த்து எழுதவும், 500 ரூபாய் கட்டணமே போதுமானது.

* ஏப்., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி, தகுதித் தேர்வு நடைபெறும்.

* ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனினும், ஏழு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


*  தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

*  இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

*   முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150
                1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Maths                                                    -              30 மதிப்பெண்
    5. Environmental studies                           -              30 மதிப்பெண்
* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Maths and Science                                -              60 மதிப்பெண்
2. சமுக அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Social Studies                                        -              60 மதிப்பெண்
2. இரண்டும் போதிப்பவர்களுக்கு :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Maths, Science and Social Studies        -              60 மதிப்பெண்
* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.

* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.

* அதன்படி தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

* விண்ணப்பத்தின் விலை ரூ.50.
* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

* ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

*  லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
   




TET-NOTIFICATION


No comments: