About Me

Saturday, October 13, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள் ...

தகுதி தேர்வு எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்
 
ஆலோசனைகள்: * நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிப் பாடமான தமிழையும், விருப்பப் பாடமான, அறிவியல் அல்லது சமூக அறிவியல், விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நிழலிட்டு காட்டுவது அவசியம
 * மறுதேர்வு எழுதுவோருக்கு, புதிய பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளவும்.
* தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள், அதே பெயரில் கிளைகளை கொண்டிருப்பதால், மையம் எது என்பதை முதல் நாளே உறுதி செய்யுங்கள்.
* போட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட் வந்திருந்தால், அரசிடம் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட, போட்டோ ஒட்டிய, தற்காலிக அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள்
* விடைத்தாளில், ஒன்றன் பின்ஒன்றாக விடையளிப்பதே நல்லது. தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்து, தெரியாதவற்றுக்கு பின்னர் விடையளிக்கலாம் என, நினைப்பது சரியல்ல; விடைத்தாள், ஓ.எம்.ஆர்., தாளாக இருப்பதால், கவனக் குறைவாக, வரிசை மாறிவிட வாய்ப்புண்டு; எல்லா விடைகளுமே தவறாகும் அபாயம் நிகழலாம்.

* வினாக்களின் ஆங்கில வடிவத்தையும் படிப்பது அவசியம். வினாக்கள், ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டு, பின்னரே தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

* வினாத்தாள் தொகுப்பு, அனைத்து விருப்பப் பாடங்களையும் உள்ளடக்கியதாகத் தரப்படுகிறது. சமூக அறிவியல், அறிவியல் வினாக்களை கவனித்து தேர்ந்தெடுக்க வேண்டும். சமூக அறிவியல், அறிவியலில் சில பாடங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதால், விருப்பப் பாட வினாப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில், கடந்த தேர்வில் சிலர் குழம்பினர்.

* கணித வினாவுக்கு, முழுக் கணக்கையுமே செய்து பார்க்க வேண்டியதில்லை. கொடுக்கப்பட்டுள்ள, "ஆப்ஷன்'களில், வினாவுக்கு சற்றும் பொருந்தாத இரண்டு விடைகளை, "டெலிஷன் மெத்தர்டு' - நீக்கல் முறையில் நீக்கிட வேண்டும். மீதமுள்ள இரண்டு, "ஆப்ஷன்'களில் எது சரி எனக் கண்டுபிடிக்க, சில, "ஸ்டெப்ஸ்'கள் போட்டால் போதும். நெருக்கமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதிவிட்டு, அடுத்த வினாவுக்கு சென்று விடலாம்.

* நேர மேலாண்மை அவசியம். ஒரே கேள்விக்கு விடையளிக்க நீண்ட நேரம், யோசிக்காதீர்.

No comments: