About Me

Thursday, December 13, 2012

தன்னலமற்ற அறப்பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் : தமிழக முதல்வர் ஜெயலலிதா



தன்னலமற்ற அறப்பணியை மேற்கொண்டு, நல்ல மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் நியமனப் பணி ஆணை வழங்கும் விழா சென்னை ஒய் எம் சி ஏ வளாகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. சுமார் 21 ஆயிரம் நியமன ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதோடு, மாணவ மாணவியருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த விழா மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது.

அதன் பின்னர் பேசிய முதல்வர், ஒரு மாணவரின்  வாழ்வில் ஆசிரியரே முக்கியத்துவம் பெறுகிறார். அவர்களை ஆளாக்கும் பணியும் ஆசிரியர்களையே சாரும் எனவே, தன்னலமற்ற அறப்பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். திறமையான எதிர்கால சந்ததியினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவ மாணவியரை தன்னம்பிக்கை உள்ளர்வளாக ஆளாக்க வேண்டும்.

அன்றன்றைய நிகழ்வுகளை கொண்டு, ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த முற்பட வேண்தும். அப்போதுதான் மாணவர்கள் நாட்டு நடப்பையும் ஏட்டுக் கல்வியோடு கற்க முடியும் என கூறினார்.
இவ்விழாவின் போது, 20,920 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை, 92 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு புத்தகப்பை, வண்ணசீருடை மற்றும் கிரையான்கள், பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவி யியல் வரைபடபுத்தகம், காலணி, இலவச சைக்கிள், பஸ்பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட ஏற்பாடாகியிருந்ததாக தெரிகிறது.

No comments: