About Me

Wednesday, December 19, 2012

முள் மேல் ஆசிரியர் பணி ....

அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்... 9ம் வகுப்பில் "சரக்கு' அடிக்கும் கொடுமை

வகுப்புக்கு நோட்டு, புத்தகம், எடுத்து வராமல், பாடம் நடத்தும்போது, குலுக்கல் சீட்டு விளையாடுவதும், மொபைல் ஃபோனில் படம் காட்டியும், மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர்' என, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில், ஆசிரியர்கள் குமுறினர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழி கல்வியில், 1,410 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள், மது போதையில் பள்ளிக்கு வந்து, கத்தி, கட்டை, இரும்பு பைப் ஆகியவற்றால், ஒருவரையொருவர் தாக்கி, கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, 17ம் தேதி, "காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, பள்ளியில், பெற்றோர், ஆசிரியர்கள் கழக கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் பேசியதாவது:
பெண் ஆசிரியைகளை, மாணவர்கள் பாட்டு பாடி, கேலி, கிண்டல் செய்கின்றனர். ஒரு வகுப்பில், ஐந்து மாணவர்கள் செய்யும் அடாவடியால், 50 மாணவ, மாணவியரின் படிப்பு கெடுகிறது. பாடம் நடத்தும் சமயத்தில், மாணவர்கள் குரூப்பாக அமர்ந்து கொண்டு குலுக்கல் சீட்டு ஆடுகின்றனர்.
அரசு, இலவசமாக புத்தகம் வழங்கினாலும், மாணவர்கள், ஒரு புக் மட்டும் எடுத்து வருகின்றனர். பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வகுப்பில் இருந்து, சொல்லாமல் மாணவர்கள் எழுந்து செல்கின்றனர்.
பாடம் நடக்கும் சமயத்தில், மொபைல் ஃபோன் மூலம் பாட்டு, படம் பார்க்கின்றனர். ஹான்ஸ், குட்கா பாக்கு போட்டுக்கொண்டு போதையில் மாணவர்கள் உள்ளதால், நாங்கள் எதுவும் பேசமுடிவதில்லை. பல மாணவர்கள், தமிழில் படிக்க, எழுத தெரியாத நிலையில் உள்ளனர். இம்மாணவர்களால், மாணவியர் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். மாணவர்களுக்கு, பெற்றோர்கள் அறிவுரை கூறி ஒழுக்கத்தை கற்றுத் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளி நேரத்தில், மது அருந்திய மாணவர்கள், அடிதடியில் இறங்கியவர் என, ஒன்பது மாணவர்களுக்கு, டி.சி., கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். பொதுத்தேர்வு காரணமாக, அடிதடியில் இறங்கிய ப்ளஸ் 2 மாணவர்களை, "சஸ்பெண்ட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: