About Me

Friday, January 25, 2013

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கமளிக்கும் இணையதளம்....

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன
சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு -  Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும் சொற்கள், இந்த மொழிகளில், குறிப்பிட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்தால் வரும் சொற்கள், ஒரு சொல்லுக்கு (பன்மைச் சொல் வடிவம் -Plural), (கடந்த காலம் -Past Tense), சொல் அல்லது( நிகழ் காலம் - Present Tense)சொல் என்ன? ஆங்கிலத்திலிருக்கும் அனைத்துச் சொற்களையும் கண்டறியும் வசதி, 2 முதல் 10 எழுத்துக்கள் என எழுத்துக்களைக் கொண்டும் அவை தொடங்கும் அல்லது முடியும் மற்றும் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டும் ஆங்கிலச் சொற்களைக் கண்டறியும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. எழுத்துக்களைக் கொண்டு போட்டிக் கேள்விகள் (Quiz)போன்றவையும் தரப்பட்டுள்ளன.
(Dictionary)
மற்றும் மொழிமாற்றக் கருவி(Translator)தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இத்தளத்தில் உள்ளன.
இணையதள முகவரிhttp://www.wordhippo.com

No comments: