About Me

Tuesday, February 5, 2013

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் இரண்டு ஆண்டு பி.எட். படிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம்
இரண்டு ஆண்டு பி.எட். படிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை அனுப்பலாம்.  

தமிழகத்தில் உள்ள, மத்திய அல்லது மாநில அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பள்ளியில் (ஆரம்பப் பள்ளி, உயர்நிலை, நடுநிலை அல்லது மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி) முழுநேர ஆசிரியராகப் பணியாற்றி வரவேண்டும். தமிழ், பி.லிட்., ஆங்கிலம், கணிதம், அப்ளைடு கணிதம், தாவரவியல், வேதியியல், இயற்பியல், பயோ-பிசிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, வரலாறு, புவியியல், மைக்ரோ பயாலஜி, பிளாண்ட் பயாலஜி, சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மனையியல், பொருளாதாரம், வணிகவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர்.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பங்கள் பெற விரும்புவோர், ரூ.800-க்கான வங்கி வரைவோலையை, ‘Director, DDE, MKU’ payable at Madurai  என்ற பெயரில் எடுத்து, நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் மேற்கூறிய அதே பெயரில் ரூ.850-க்கான  வங்கி வரைவோலை எடுத்து, சுயமுகவரியிட்ட உறையை இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதிலும் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையங்களிலிருந்தும் இந்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 25.02.2013

நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2013

விவரங்களுக்கு: www.mkudde.org

No comments: