About Me

Saturday, February 16, 2013

ஆசிரியர்களை தாக்கினால் சிறை : கலெக்டர் எச்சரிக்கை...

வேலூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 301 தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்குதல், தேர்வின்போது காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை, நிரந்த கண்காணிப்பு படை அமைத்தல் மற்றும் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இருந்து விடைத்தாள்களை போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு எடுத்து வருதல் போன்றவை குறித்து கல்விக்குழு ஆய்வுக் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  நடந்தது. 
இந்த கூட்டத்தில் கலெக்டர் சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், இன்ஸ்பெக்டர்கள் கண்டிப்பாக ஒருவருக் கொருவர் தங்கள் செல் நம்பர்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். மேலும் தேர்வு எழுதும் மையங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி, தண்ணீருடன் கூடிய கழிவறை வசதி இருக்க வேண்டும். அதேபோல் தேர்வு எழுதும்போது மின்சாரம் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே அருகில் உள்ள மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் அரக்கோணம் பகுதியில் காப்பி அடித்த மாணவர் களை தடுத்த ஆசிரியர்களை, தேர்வு முடிந்து பின்னர் மாணவர்கள் தாக்கி உள்ள னர். அதுபோல் இந்த முறை ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வருவோர் மீதும் பாரபட்சமின்றி கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றா

No comments: