About Me

Tuesday, May 14, 2013

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப
கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன்  பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
                                 
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.inன்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும்  அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் code கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal
செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.



=====================%%%%%%%%%%%%%%%%%%====================

Exchange Code List
Exchange Code Exchange Description Exchange Code Exchange Description
ARD District Employment Office-Ariyalur

CBD District Employment Office-Coimbatore
CBR Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore
CDC Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore
CHD District Employment Office-Chennai CHG Head Office-Chennai
CHP Professional and Executive Employment Office-Chennai
CHR Regional Deputy Director Office-Chennai
CHS District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai
CHT District Employment Office(Technical Personnel).-Chennai
CHU District Employment Office (Unskilled)-Chennai
CUC Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore
CUD District Employment Office-Cuddalore
DGD District Employment Office-Dindigul
DRD District Employment Office-Dharmapuri
ERD District Employment Office-Erode
KGD District Employment Office-Krishnagiri
KPD District Employment Office-Kancheepuram
KRD District Employment Office-Karur
MDD District Employment Office-Madurai
MDP Professional and Executive Employment Branch Office-Madurai
MDR The Regional Deputy Director (Employment) Office-Madurai
NGD District Employment Office-Kanyakumari
NKD District Employment Office-Namakkal
NPD District Employment Office-Nagapattinam
PDD District Employment Office-Pudukottai
PRD District Employment Office -Perambalur
RPD District Employment Office-Ramanathapuram
SGD District Employment Office-Sivaganga
SLD District Employment Office-Salem
TCC Coaching-cum-Guidance centre -Trichy
TCD District Employment Office-Trichy
TCR The Regional Deputy Director (Employment)-Trichy
THD District Employment Office-Theni
TJD District Employment Office-Thanjavur
TMD District Employment Office-Thiruvannamalai
TNC Coaching-cum-Guidance Centre-Thirunelveli
TND District Employment Office-Thirunelveli
TPD District Employment Office-Tiruppur
TRD District Employment Office-Thiruvarur
TTD District Employment Office-Tuticorin
TVD District Employment Office-Thiruvallur
UGD District Employment Office-Nilgiris
UGV Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris
VLC Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore
VLD District Employment Office-Vellore
VPD District Employment Office-Villupuram
VRD District Employment Office-Virudhunagar

No comments: