About Me

Tuesday, July 23, 2013

தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!

தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!



Rashatriya Madhayamic Shikasha Abhiyan (‪‎RMSA‬) என்ற அமைப்பு எடுத்த 2012-13 கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

=>சென்னை, விழுப்புரம், வேலூர், நீலகிரி, மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மொத்தம் 16 அரசுப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட பணியில் இல்லை..!

==>மொத்தமாக... தமிழ்நாட்டின் 2,253 அரசுப்பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது..!  இதில், அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 195 அரசுப்பள்ளிகள் இப்படி 'ஓராசிரியர் பள்ளி'யாக உள்ளன.
மொத்தமாக மாநிலத்தில் 83,641 மாணவர்கள் ஓராசிரியர் பள்ளியில் பயிலுகின்றனர். இவர்களில் ஓராசிரியர் கொண்டு SSLC & +2  படிப்போர் 765 மாணவர்கள்..!

===>அடுத்து, மாநிலத்தில்... 16,421 அரசுப்பள்ளிகளில் இரண்டே 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது..!

====>தமிழ்நாட்டில், 21,931ஆசிரியர் பணி இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன..! இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டுமே 3000 போஸ்ட் வேகண்ட்...!

=====>மாநிலத்தின் 387 அரசுப்பள்ளிகளில்... PTR (pupil-teacher ratio) எனப்படும் "இத்தனை மாணவர்க்கு இத்தனை ஆசிரியர் எனும் விகிதம்" 100 ஐ தாண்டி உள்ளது..! இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 லட்சம்..! 


ஆனால்... நகரங்களில் அதிலும் குறிப்பாக சென்னையில் ஆசிரியர் பணி இடங்களை தாண்டி மித மிஞ்சிய நிலையில் தேவைக்கு அதிகப்படியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பிரச்சினை நகருக்கு வெளியே உள்ள கிராமப்புற பள்ளிகளில்தான். 

SOURCE. http://pinnoottavaathi.blogspot.com/2013/07/blog-post_23.html

No comments: