About Me

Sunday, August 4, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு பணியாளர்கள் சம்மேளன தலைமைப் பொதுச்செயலாளர் கே.கே.என்.குட்டி, 
  ‘’மத்திய அரசு ஊழியர்களுக்கு 10–11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும். அகவிலைப்படி சரியாக எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என்பது தொழில் துறை பணியாளர்களுக்கான ஜூன் மாத நுகர்வோர் விலை அட்டவணை இந்த மாதம் 30–ந்தேதி வெளியிடப்படுகிறபோது உறுதி செய்யப்படும்.

கடந்த மாதம் 31–ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க விகிதம் 11.06 சதவீதமாக உள்ளது. இது கடந்த மே மாதம் 10.68 சதவீதமாக இருந்தது.
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வின்போது, தொழிலாளர்களுக்கான ஓராண்டு கால (ஜூலை 2012– ஜூன் 2013) சில்லரை பணவீக்கத்தை கவனத்தில் கொள்வது வழக்கம் ஆகும்.
தற்போதைய நிலவரப்படி இந்த ஓராண்டு கால சில்லரை பணவீக்க விகிதம் 10 சதவீதம் ஆகும். இதுவே அகவிலைப்படி உயர்வாக செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்துகிற வேளையில்,

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை ஆகும்.கடந்த 2011, ஜனவரி 1–ந்தேதியில் இருந்து, விலைவாசி உயர்வு என்பது 171 சதவீத அளவுக்கு அமைந்துள்ளதால் தற்போது அகவிலைப்படி 10 சதவீத அளவுக்கு உயர்த்தப்படுவது பயன் அளிக்காது’’என்று கூறினார்.

source : http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=104970

No comments: