பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 23ம்தேதி வெளியாகிறது. தேர்வு
முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை தயார் நிலையில் உள்ளது.பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம்தேதி தொடங்கி ஏப்ரல் 9ம்தேதி முடிவடைந்தது.
இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 11,552 பள்ளிகள் மூலமாக 10,38,876
மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5,30,462, மாணவிகள்
5,08,414 பேர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 74,647 பேர்
எழுதியுள்ளனர்.தமிழகம் முழுவதும் 3,179 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை 56,500 பேர் எழுதியுள்ளனர்.
புதுச்சேரியில் 18,500 பேர் எழுதியுள்ளனர்.தேர்வு ஏப்ரல் 9ம்தேதி
முடிவடைந்ததையடுத்து, உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
ஏப்ரல் 22ம்தேதி விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது. மாணவர்கள் பெற்ற
மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா செண்டருக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பட்டியலின்படி டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களுக்கு உரிய
மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணி நடக்கிறது. தற்போது தேர்வு முடிவுகளை
வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதையடுத்து 23ம்தேதி காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ
வளாகத்தில் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவுகளை வெளியிடுகிறார்.
அதற்கு பிறகு மாணவர்கள் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தேர்வுத்
துறை இணைய தளத்தில் இருந்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான ஒரு மணி நேரத்துக்கு பிறகு இந்த
விபரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமும் தேர்வு
முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள்
வெளியி டுவதற்கான வெப்சைட் விவரங்கள் விரைவில் வெளியிடவும் தேர்வு துறை
திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment