About Me

Saturday, May 10, 2014

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் - 'கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி'



எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்த, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நேற்று காலை வெளியானது. பிளஸ் 1, பிளஸ் 2 கல்வி முறை அமல்படுத்தப்பட்ட, 36 ஆண்டுகளில், முதல் முறையாக, இந்த ஆண்டு, தேர்ச்சி, 90 சதவீதத்தைத்
தாண்டி, தமிழகம், அபார சாதனை படைத்தது. முதல் முறையாக, அதிகம் பேர் தேர்வாகி, புதிய சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில், மேல்நிலை கல்வி பாடத் திட்டம், 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பொதுத் தேர்வு, 1980ல் நடந்தது. அதில் இருந்து, 2013 வரை நடந்த, 33 ஆண்டு பொதுத் தேர்வுகளில், ஒருமுறை கூட, பிளஸ் 2 தேர்ச்சி, 90 சதவீதத்தை எட்டியதில்லை.கடந்த மார்ச், 3 முதல், 25 வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, 8.21 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று காலை, 10:00 மணிக்கு சென்னையில் வெளியிட்டார். தேர்வெழுதிய, 8.21 லட்சம் மாணவ, மாணவியரில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தனர். கடந்த ஆண்டு, 88.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 2.5 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். முதல் முறையாக, இந்த ஆண்டு, 90.6 சதவீத தேர்ச்சியை தொட்டு, தமிழகம், சாதனை படைத்துள்ளது. 'இந்த ஆண்டு, பொதுத் தேர்வில், பெரிய அளவிற்கு, எந்த குளறுபடியும் நடக்காததால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்' என, 'தினமலர்' நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. 90 சதவீதம் முதல், 95 சதவீதம் வரை, தேர்ச்சி அதிகரிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் முறையாக, தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியுள்ளது.

மாணவியர் அசத்தல்
தேர்வெழுதிய, 3.78 லட்சம் மாணவர்களில், 3.30 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 87.4. அதே நேரத்தில், 4.43 லட்சம் மாணவியர் தேர்வெழுதியதில், 4.14 லட்சம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.4.

சாதனையில் சரிவு:
தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில அளவில்,முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, பெரும்பாலும், 10க்கும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு, 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.ஆனால், இந்த ஆண்டு, நான்கு மாணவர்கள் மட்டுமே, மூன்று இடங்களைப் பிடித்தனர்
.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, சுஷாந்தி, 1,193 மதிப்பெண் எடுத்து, முதலிடத்தைப் பிடித்தார்.
* தர்மபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி, அலமேலு, 1,192 மதிப்பெண் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார்.
* நாமக்கல், கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், துளசிராஜன், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை அருகில் உள்ள மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, நித்யா ஆகியோர், 1,191 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.
முதல், மூன்று இடங்களில், அரசு பள்ளி, ஒன்றுகூட இடம்பெறவில்லை. இந்த ஆண்டு, அரசு பள்ளிகளில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டும், அப்பள்ளி மாணவர்கள், மாநில அளவில், 'ரேங்க்' பெறாதது, கல்வித் துறையை, கவலை அடையச் செய்துள்ளது.

தமிழ்: :
பெயர்: ஸ்ருதி; பள்ளி: விஜய்வித்யாலயா பள்ளி, ஓசூர்.ரேங்க்: முதல் இடம்.
பெயர்: அஸ்வத்; பள்ளி: வித்யாமந்திர்பள்ளி, ஊத்தங்கரை. ரேங்க்: இரண்டாம் இடம்.
பெயர்: ரஞ்சித்; பள்ளி: வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், சென்னை. ரேங்க்: மூன்றாம் இடம்

 தமிழ் அல்லாத பிறமொழி:
பெயர்: அபிநயா; பள்ளி: சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, தாம்பரம், சென்னை: ரேங்க்: இரண்டாம் இடம்.
பெயர்: கனக பார்த்திபன் இலக்கியா; பள்ளி : ஸ்ரீ வித்யோதயா மேல்நிலைப் பள்ளி, தி.நகர், சென்னை: ரேங்க்: மூன்றாம் இடம்.

தாவரவியல், விலங்கியல்:
பெயர்: ஆசிகாபானு; பள்ளி: டி.எஸ்.டி.ராஜா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: தாவரவியல், விலங்கியல் பாடங்களில் முதல் இடம்.
தாவரவியல்:
பெயர்: அபிநயா; பள்ளி: டி.எஸ்.டி.ராஜா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

உணவு மேலாண்மை:
பெயர்: அஞ்சு; பள்ளி: சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி; ரேங்க்: இரண்டாம் இடம்.
பெயர்: சாய் சரண்யா; பள்ளி: சி.எஸ்.ஐ., பேன்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

நுண் உயிரியல்:
பெயர்: சேக சிவானி காந்த்; பள்ளி: சி.எஸ்.ஐ., ஜெசி மோசஸ்மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர்; ரேங்க்: முதல் இடம்.
பெயர்: சினேகா எலிசபெத்; பள்ளி: சி.எஸ்.ஐ., பேன்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

புள்ளியியல்:
பெயர்: ஆர்.விஜயலட்சுமி; பள்ளி: ஸ்ரீஅகோபிலமடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை; ரேங்க்: முதல் இடம்.
பெயர்: எம்.விஜயலட்சுமி; பள்ளி: ஸ்ரீஅகோபிலமடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை; ரேங்க்: இரண்டாம் இடம்.

வரலாறு:
பெயர்: திவ்யபாரதி; பள்ளி: முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

உயிரிவேதியியல்:
பெயர்: ஷாரத்; பள்ளி: ஸ்ரீசங்கர வித்யாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவான்மியூர், சென்னை. ரேங்க்: முதல் இடம்.
பெயர்: ஹரிதா; பள்ளி: ஸ்ரீசங்கர வித்யாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவான்மியூர், சென்னை. ரேங்க்: இரண்டாம் இடம்.
பெயர்: ரோஷிணி; பள்ளி: செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, செம்பியம், சென்னை; ரேங்க்: இரண்டாம் இடம்.
பெயர்: ஸ்ருதி; பள்ளி: ஸ்ரீசங்கர வித்யாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவான்மியூர், சென்னை. ரேங்க்: மூன்றாம் இடம்.

சமஸ்கிருதம்:
பெயர்: அகன்ஷா அஜீத்; பள்ளி: வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர், சென்னை; ரேங்க்: இரண்டாம் இடம்.
பெயர்: அட்சயா; பள்ளி: ஸ்ரீஅகோபில மடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

பிரெஞ்ச்:

பெயர்: கார்த்திகா; பள்ளி: டி.எஸ்.டி., ராஜா பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: முதல் இடம்.
பெயர்: கோகி ஸ்ரீ; பள்ளி: டி.எஸ்.டி., ராஜா பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தண்டையார்பேட்டை
 சென்னை; ரேங்க்: முதல் இடம்.

97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம்: 74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம்:பிளஸ் 2 தேர்வில், 97.05 சதவீத தேர்ச்சியுடன், ஈரோடு மாவட்டம், முதலிடத்தை பிடித்தது. திருவண்ணாமலை மாவட்டம், 74.4 சதவீத தேர்ச்சி பெற்று, கடைசியிடத்தில் உள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், விருதுநகர் மாவட்டம், எப்போதும் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் சுருதி குறைந்தது:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை முதற்பாடமாக எடுத்து படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களை பிடிப்போர் பட்டியலில், நாமக்கல் மாவட்டம், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.2012: பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை, நாமக்கல் மாவட்ட மாணவர்கள், நான்கு பேர் பிடித்தனர்.
2013: பிளஸ் 2தேர்வில், 1,200க்கு, 1,189 மதிப்பெண் எடுத்து, நாமக்கல் மாவட்ட மாணவர் இருவர், முதலிடம் பிடித்தனர். இரண்டாம் இடத்தில், ஒரு மாணவர், மூன்றாம் இடத்தில் நான்கு பேர் என, ஏழு பேர், மாநில அளவில் இடம் பிடித்தனர்.இப்படி தொடர்ந்து சாதனை படைத்து வந்த நாமக்கல் மாவட்டத்தின் சுருதி, இந்த ஆண்டு குறைந்துள்ளது.இந்த ஆண்டு, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை நான்கு பேர் தான் பெற்றனர். முதல் இடம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும்; இரண்டாம் இடம், தர்மபுரிக்கும் சென்றது. மூன்றாம் இடத்தை, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்ட மாணவர் இருவர் தட்டிச் சென்றனர்.நாமக்கல் மாவட்ட மாணவர் துளசிராஜன் (1,191 மதிப்பெண்) கூட, இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இவர், சேலம் மாவட்டம், பெருமாள்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேறும் வட மாவட்டங்கள்
பொதுத் தேர்வு தேர்ச்சியில், தொடர்ந்து பின்தங்கியிருந்த வட மாவட்டங்கள், இந்த ஆண்டு, நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், தென் மாவட்டங்களை விட, குறைவாகவே இருந்து வருகின்றன.ஆனால், இந்த ஆண்டு, கணிசமாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.

'கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி':

தமிழக கல்வித் துறை வரலாற்றில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியைப் பெற்றிருப்பது, இதுவே முதல் முறை.இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறுகையில், ''அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர் என, அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஆரம்பத்தில் இருந்து திட்டமிட்டு, தலைமை ஆசிரியர்களை ஊக்குவித்து, செயல்பட வைத்தோம். அதற்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது,'' என்றார்.

Thanks...... Dinamalar

No comments: