About Me

Saturday, May 3, 2014

கொளுத்தும் "அக்னி" வெயில் நாளை ஆரம்பம்

 தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையின் துவக்கத்திலேயே
எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடும் வெயிலுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. வழக்கமாக பெய்ய வேண்டி பருவ மழை பெய்ததே காரணம் என்கிறனர் வானிலை மைய அதிகாரிகள்.
வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை உயரத் தொடங்கியது. தமிழகத்திலேயே அதிபட்சமாக வேலூரில் கடந்த 27ம் தேதி 106.8 டிகிரியாக வெயில் அளவு பதிவாகியது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக  வெயிலின் தாக்கம்102 டிகிரிக்கு குறையாமல் கொளுத்தி வருகிறது. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் வேலூரின் முக்கிய சாலைகள் பகல் நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடந்து செல்வோரின் எண்ணிக்கை கூட குறைவாகவே இருந்தது. பிளாட்பார இளநீர் கடைகள், தள்ளுவண்டியில் விற்கப்படும் மோர், ராகி கூழ் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. மேலும் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (4ம் தேதி ) தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் கலக்கமடைந்து உள்ளனர். இந்த நாட்களில் கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசும் என தெரிகிறது. சாதாரண நாட்களில் 106 டிகிரியாக வெயில் பதிவாகும் நிலையில் " அக்னி நட்சத்திரம் " என்னும் கத்திரி வெயில் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

No comments: