About Me

Thursday, December 30, 2010

(டிட்டோஜாக் )

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழு
(டிட்டோஜாக் )

குறிப்பு...
தொடர் மறியல் போராட்டத்தின் எதிரொலியாக 30.12.2010 இல் மீண்டும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
குறிப்பு 2
அரசுடனான 30.12.2010 பேச்சுவார்த்தை, 31.12.2010 காலையில் நடைபெற உள்ளது.

Tuesday, December 28, 2010

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த 350 ஆசிரியர்கள் கைது

சேலம், டிச 27-

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜேக்) சேலம் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச சோரிக்கை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கோ.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ப.ரமேஷ், சங்கர் உள்பட பலர் பேசினர்.

பின்னர் ஆசிரியர்கள் மறியல் செய்தனர். இவர்களை டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மொத்தம் 356பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 168பேர் பெண்கள். கைதான அனைவரும் சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த மறியல் குறித்து நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் என நம்புகிறோம். எங்களது தொடர்மறியல் போராட்டம் தொடரும். நாளை முதல் வருகிற 31-ம்தேதிவரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Monday, December 27, 2010

தமிழகம் முழுவதும் ஏராளமான ஆசிரியர்கள் கைது!

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஏராளமான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அரசு கைது செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் நடத்தப்படும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அமைப்பு அறிவித்திருந்தது.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Wednesday, December 15, 2010

(டிட்டோஜாக் )

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழு
(டிட்டோஜாக் )
13.12.2010- மாவட்ட டிட்டோஜாக் கூட்டம்
14.12.2010- வட்டார டிட்டோஜாக் கூட்டம்
27.12.2010 முதல் 31.12.2010 முடிய -மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம்