About Me

Tuesday, December 28, 2010

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த 350 ஆசிரியர்கள் கைது

சேலம், டிச 27-

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜேக்) சேலம் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச சோரிக்கை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கோ.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ப.ரமேஷ், சங்கர் உள்பட பலர் பேசினர்.

பின்னர் ஆசிரியர்கள் மறியல் செய்தனர். இவர்களை டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மொத்தம் 356பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 168பேர் பெண்கள். கைதான அனைவரும் சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த மறியல் குறித்து நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் என நம்புகிறோம். எங்களது தொடர்மறியல் போராட்டம் தொடரும். நாளை முதல் வருகிற 31-ம்தேதிவரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: