About Me

Friday, August 12, 2011

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் ரூ.1000 கோடி ஊழல்-தொலைதூரக் கல்வி இயக்குனர் புகார்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக தொலை தூரக் கல்வி இயக்குனர் ரமேஷ் குற்றம் சாட்டியுளளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பி.எட். மாணவர் சேர்க்கையில் ஊழல் நடந்துள்ளது. பி.எட்.மாணவர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 523 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 23 இடங்களுக்கு பட்டம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து இடங்களுக்கும் முறையான சேர்க்கை நடத்தப்படவில்லை. இதற்கான விண்ணப்பம் கூட முறையாக வழங்கவில்லை. இதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது. பி.எட். சேர்க்கை மட்டுமின்றி, தனியார் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யு.) உள்ளிட்ட பல்வேறு வகைகளில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

ஆனால் ஊழலைப் பற்றி கவலைப்படாமல் என்னை இந்த பதவியிலிருந்து நீக்க, சிலர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விரிவான புகார் அளித்துள்ளேன் என்றார்.

இந்த குற்றச்சாட்டால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுபட்டுள்ளது.