About Me

Friday, August 12, 2011

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல்?

நெல்லை: உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டப்படி அக்டோபர் மாதம் நடைபெறும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மின்னனு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மூலமும், கிராமப்பகுதிகளில் ஓட்டு சீட்டு முலமும் வாக்குப் பதிவை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வழங்க மத்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஓட்டுச் சீட்டு அச்சடிப்பதற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாக்குச் சாவடிகளை உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுல்ளது. இது தவிர வார்டு தேர்தலை கருத்தில் கொண்டு சிறிய கிராமங்களிலும் வாக்குச் சாவடி அமைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

No comments: