About Me

Friday, August 12, 2011

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி

சென்னை: திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பொதுமக்கள் பீதியைடந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

திருச்சியில் இன்று முற்பகலில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி நகரின் சில பகுதிகளிலும் சிறுகனூர் என்ற இடத்திலும் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். முற்பகல் 11.20 மணியளவில் இது ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் லேசாக ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர்.

அதேபோல கடலூர் மாவட்டம் திட்டக்குடி, சேலம் மாவட்டம் தலைவாசல், பெரம்பலூர் மாவட்டம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்ச்சி உணரப்பட்டது.

தலைவாசல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நில அதிர்ச்சியை உணர்ந்துள்ளனர். பெரம்பலூரில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.

நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். வீடுகள் குலுங்கியதால் வெளியே வந்து நின்றனர். பலர் பள்ளிகளுக்குப் படையெடுத்து தங்களது பிள்ளைகளை அழைத்து வந்தனர். பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.

No comments: