About Me

Friday, August 19, 2011

பள்ளிக்கு ‘கட்’ அடித்த ஹெச்.எம். சஸ்பெண்ட்

பள்ளிக்கு ‘கட்’ அடித்த ஹெச்.எம். சஸ்பெண்ட்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பெருங்குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று காலை 9 மணிக்கு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் தலைமை ஆசிரியர் குப்புசாமி வரவில்லை. அவரது செல்போனில் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

வகுப்பு அறைகளின் சாவி, தலைமை ஆசிரியர் அறையில் இருந்ததால் 11 மணி வரை மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியிலேயே காத்திருந்தனர். இதையடுத்து, கிராம மக்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.சுகன்யா, கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் ஆகியோர் பள்ளிக்கு சென்றனர்.

பகல் 12 மணிக்கு பிறகும் தலைமை ஆசிரியர் வராததால் தண்டராம்பட்டு தாசில்தார் பொன்முடி முன்னிலையில், தலைமை ஆசிரியரின் அறை பூட்டு உடைக்கப்பட்டது. அங்கிருந்த சாவிகளை எடுத்து வகுப்பறைகள் திறக்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு பிறகு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

எந்த தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்ததுடன், பொறுப்புகளை உதவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க தவறியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் குப்புசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

Home Page thanks to NakkeeranHome Page













No comments: