(19 Aug) தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 27ம் தேதி சமச்சீர் கல்வி சார்ந்த செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி பயிற்சி கருத்தரங்கு நடக்க உள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பகவதி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை கற்றல் கல்வி, எளிய படைப்பாற்றல் கல்வி, படைப்பாற்றல் கல்வி முறையினை சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் சார்ந்து நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பயிற்சியினை ஆசிரியர்களுக்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியுமான பகவதி தலைமை வகித்தார். அவர் பேசியதாவது; கடந்த 13ம் தேதி வழங்க திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்ட சிம்பிளி இங்கிலீஷ் டி.வி.டி பயறிசி (பேச் 2) வரும் 20ம் தேதி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவள மைய
பயிற்சியில் வழங்க வேண்டும்.பல் மற்றும் கண்பாதுகாப்பு பயிற்சி குறுவள மைய பயிற்சியாக வரும் 20 மற்றும் 27ம் தேதி ஆகிய நாட்களில் உயர் தொடக்க மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்ட பயிற்சி தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.வரும் 27ம் தேதி அன்று தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி பணிமனையாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிமனையில் சமச்சீர் கல்வி சார்ந்து செயல்வழிக்கற்றல், எளிய படைப்பாற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு பகவதி தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 13 மேற்பார்வையாளர்கள் தகவல் ஆவண அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.thanks Dinamalar
No comments:
Post a Comment