புதுடில்லி: உயர்நிலை மற்றும் மேனிலை கல்வி பாடத்திட்டத்தில், மாணவர்கள் சீருடை அணியவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார். ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தின் போது, துணைக் கேள்விகளுக்கு கபில்சிபல் பதிலளித்து கூறியதாவது: மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பி.இ.,), நாட்டில் உள்ள அனைத்து கல்வி முறைகளிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புகளில், மைய பாடத்திட்டங்களாக அறிவியல் மற்றும், கணிதப் பாடங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இதனால், அனைத்து மாணவர்களும் தொழில்முறை படிப்புகளில், எளிதாகச் சேர்ந்து பயில முடியும் என்றும் தெரிவித்துள்ளது. உயர்நிலை மற்றும் மேனிலை பாடத்திட்டத்தில், மாணவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இவ்வாறு, கபில்சிபல் கூறினார்.
No comments:
Post a Comment