இந்திரா காந்தி பிளானட்டோரியம்உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் உள்ளது. 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சனிக் கிரகம் போன்று அதன் 5 வளையங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிசயம்!கிரகங்களின் அமைப்பு மற்றும் இந்தியா அனுப்பிய செயற்கைக் கோள்களின் மாதிரி வடிவங்கள் இங்கு உள்ளன. 168 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய கோளரங்கமும் உள்ளே உள்ளது.கேபிடல் கேட்ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகரான அபு தாபியில் அமைந்துள்ளது. பைசா நகர சாய்ந்த கோபுரம் போலக் கட்டவேண்டும் என்ற ஆசையில் எழுந்துள்ள கட்டடம். 160 மீட்டர் உயரம். 18 டிகிரி சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ள இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. 35 மாடிகள் உள்ளன. ஹையாட் என்ற நட்சத்திர ஹோட்டலும் உள்ளது. 21,000 சதுர மீட்டர் அளவுக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன! லூசி யானை6 மாடி கட்டடம். பெரும்பாலும் மரக்கட்டைகள் மற்றும் தகரத்தால் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள மார்கேட் நகரில் உள்ளது. 1882-ல் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த கட்டடம். ரியல் எஸ்டேட் தொழிலை வளர்ப்பதற்காக கட்டப்பட்டாலும், இன்றும் பெரும் செலவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்து வருகிறது.பியானோ வீடுசீனாவின் ஹூயானான் நகரத்தில் அமைந்துள்ள வித்தியாசமான வீடு. நடுவில் காணப்படும் வயலின் போன்ற பகுதியில் மேலே செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில், சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காகவே கட்டப்பட்ட வீடு!ஆட்டோமியம்பெல்ஜியத்திலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் 1958-ல் நடைபெற்ற உலகப் பொருட்காட்சிக்காக கட்டப்பட்டது. 102 மீட்டர் உயரம். 9 ஸ்டீல் கோளங்களைக் கொண்டது. உச்சியிலிருந்து பார்த்தால் பிரஸ்ஸல்ஸ் நகரமே முழுமையாகத் தெரியும்! சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளதால் இங்கே இன்றும் அடிக்கடி பொருட்காட்சிகள் நடைபெறுகின்றன.
thanks
thanks
No comments:
Post a Comment