புதுடில்லி: லோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றது. இதனையடுத்து ஹசாரே இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார். இவருக்கு 3 சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை முடித்தார். இது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி என ஹசாரேஆதரவாளர்கள் தெரிவித்தனர். உண்ணாவிரதம் முடிந்ததும் இசை கலைஞர்கள் மகிழ்ச்சி பொங்கிட பாடினர். ஹசாரே கை தட்டியபடி ரசித்தார்.
மக்கள் சக்தி மகத்தானது ஹசாரே பேச்சு: விரதத்தை முடித்து மேடையில் பேசிய ஹசாரே, எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இளைஞர்கள் சக்தி இந்த போரட்டத்தில் சிறப்பு இடத்தை பிடித்தது. மக்கள் சக்தி பார்லி.,யை விட பலமானது என்பதை நினைவுப்படுத்துகிறேன். நடந்து முடிந்திருக்கும் இந்த போராட்ட அணுகுமுறையில் எவ்வித அசம்பாவிதமும், சட்ட ஒழுக்கத்துடன் நடந்திருக்கிறது. இது ஒரு சிறப்பான முன்னுதாரணம் ஆகும். என்றார்.
No comments:
Post a Comment