ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1900ம் ஆண்டு வாக்கில் பஸ் போக்குவரத்து சேலத்தில் இல்லை. மக்கள், போக்குவரத்திற்கு முழுக்க, முழுக்க குதிரை
வண்டிகளையும், மாட்டு வண்டிகளையுமே நம்பி இருந்தனர். அதனால் வியாபாரம், பிழைப்பு தேடி வெளியூர்களில் நெடுந்தொலைவு இருந்து குதிரை, மாட்டு
வண்டிகளில் வருவது வழக்கம். இப்போது உள்ளது போல ரோடு, வாகன வசதி இல்லை. அதனால் மரங்கள் இருபுறமும் அடர்ந்த காட்டுப்பாதையில் கூட்டாக
நடந்து வருவர். விலங்குகள் திடீரென தாக்கினால் உயிர் போய் விடும் என்பதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வரவேண்டும்.
குதிரை, மாட்டு வண்டிகளில் வருவோர் சேலத்தை அடைந்தவுடன் இப்போது போஸ் மைதானம் என்று அழைக்கப்படும் அந்தக்கால விக்டோரியா
மைதானத்தில்தான் கொண்டு வந்து வண்டிகளை நிறுத்துவது வழக்கம். அதற்கு முன்பாக நீண்டதூரம் எஜமானரை சுமந்து வந்ததால் குதிரைகள், காளைகளுக்கு
களைப்பும், தண்ணீர் தாகமும் ஏற்படும். அவற்றின் தாகம் தீரும் வகையில் போஸ் மைதானம் அருகிலும் சேலம் நகர மையப்பகுதியிலும் உள்ள, இப்போது
இருக்கும் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகில், தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.
இங்கிலாந்து நாட்டின் மாமன்னர் 5ம் ஜார்ஜ் இந்தியாவில் டெல்லி தர்பாரில் 1911ம் ஆண்டு இந்தியாவின் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.
இந்த முடிசூட்டு விழா நினைவாக அதற்கு அடுத்த ஆண்டு 12&7&1912ல் சேலம் மாவட்ட கலெக்டர் பெட்போர்டு என்பவரால் இந்த தண்ணீர் தொட்டி
சேலத்தில் திறந்து வைக்கப்பட்டது. நூறு ஆண்டுகளை தொட்ட நிலையில் இன்றும் தண்ணீர் தொட்டி காட்சியளிக்கிறது.
செய்தி, படம்: கே.பூபதி

thanks
No comments:
Post a Comment