About Me

Monday, September 19, 2011

ஆசிரியர்களின் உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்கள் பாதிப்பு-18-09-2011

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உதவி தேர்தல்
அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்பணிக்காக ஆசிரியர்கள் குறைந்தது 15 நாட்களாவது செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பாடங்கள் நடத்த இயலாது.
ஒரு சில மாவட்டங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்ககூடாது என்ற எண்ணத்தில், வட்டார வள மைய ஆசிரியர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், பொதுப்பணி, வேளாண் துறை அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் ஆகியோரை நியமித்து உள்ளனர். பெரும்பான்மையான மாவட்டங்களில் ஆசிரியர்களையே நியமிக்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: &'ஏற்கனவே இரண்டு மாதமாக புத்தகம் இல்லை. தற்போதுதான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் பணிக்கும் செல்லும் நிலையில், மாணவர்களின் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே ஆசிரியர்களை தவிர்த்து பிற துறையில் உள்ளவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்&' என்றார்.

No comments: