மேலோட்டமாகப் பார்த்தால் இவ்வாக்கியத்தின் அர்த்தம் முழுமைப்படும் முன்னரே, என்ன அபத்தம் இது என்றுதானே தோன்றும். ஆனால் விஷயம் அவ்வளவு இலகுவானதல்ல. குழந்தைகளின் உளவியல் ரீதியாக அணுகுவதை இக்கட்டுரை சொல்லிச் செல்கிறது.
மாணவர்களும், ஆசிரியர்களும்
பள்ளிவளாகத்துக்குள் நுழையும் போது ஒரே மாதிரியான இலக்குகளுடன்தான் நுழைகின்றனர். அவை, வகுப்பறையை எப்படி ஈர்ப்பது, புதிதாக சிலவற்றைக் கற்றுக்கொள்வது, நல்ல தரஅளவைப் பெறுவது என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால், ஆசிரியர்களின் கோணத்தில் இருந்து பார்க்கும் போது, வகுப்பறையில் நடக்கும் பிழைகள், தவறுகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது ஆய்வுக்குரியது. குழந்தைகளின் தலைமுறையை உயர்த்துவதுதான் ஆசிரியர்களின் கடமை. சில சமயங்களில் மாணவர்கள் வகுப்பறையில் அசவுகரியத்துடன் அமர்ந்திருப்பதற்கும், அவர்கள் தோற்பதற்கும் நாமே காரணமாகி விடக்கூடாது.
ஒரு குழந்தை தவறாகச் செய்து விட்டதற்காக, பிழை செய்து விட்டதற்காக அதிகபட்சமாக பயப்படுகிறது என வைத்துக் கொள்வோம்; அக்குழந்தை ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடிப்பதற்கும், மாற்று வழியைத் தேடுவதற்கும், படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்துவதற்கும், புதிய முயற்சியில் ஈடுபடுவதற்கும் கூட அஞ்சும். ஒரு கடினமான கேள்விக்கு விடை தெரியவில்லை என்பதற்காக, தன் கையை உயர்த்த அக்குழந்தை பயப்பட்டால், அக்கேள்விக்கு மாற்று வழியில் எப்படி விடைதேடும் அல்லது புரிந்து கொள்ளும். ஆசிரியர் அக்குழந்தைக்கு வேறு வழிமுறைகளில் எப்படி புரிய வைப்பார்.
ஆசிரியர் ஒருவரே சொன்னது போல, பாதிக்கப்பட்டவர்களிலேயே அவர்கள்தான் சிறந்தவர்கள். இதற்கு என்ன காரணம்? பள்ளிகளில் வெற்றி என்பது அதிக மதிப்பெண் பெறுவதில்தான் இருக்கிறது. தரத்தை மதிப்பெண்களே நிர்ணயிக்கும் போது, தவறுகளும், பிழைகளும் எப்படி நேர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடும்.
பிழைகள் கண்டிக்கத்தக்கவை அல்ல. அக்குழந்தைகளின் வேறு பரிமாணங்களை அவற்றைக் கொண்டு வெளிப்படுத்தக் கூடும். தவறுகளுக்காகவும், தெரியவில்லை என்ற பதிலுக்காகவும் குழந்தைகள் அஞ்சக்கூடாது. அவைகளை திருத்திக் கொள்ள வேறு வழிமுறைகளைக் கையாண்டால், அக்குழந்தைகள் எந்த சூழலையும் தைரியமாக எதிர்கொள்ளும்.
உதாரணமாக ஜப்பான் வகுப்பறைகளில், வகுப்பிலேயே மாணவர்கள் 10 நிமிடங்கள் கணக்குகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண அனுமதிக்கப்படுகின்றனர். தவறாகச் செய்த போதும், அது இகழ்தலுக்குரிய ஒன்றாக கருதப்படுவதில்லை. தகுதியிழப்பு செய்வதில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டு, இன்னும் கற்றுக் கொள்வதன் தேவையை சொல்லித்தருகின்றனர்.
குழந்தைகள் தவறு செய்வதையும், தவறுகளுடன் வாழ்வதையும் சில பள்ளிகள் அனுமதிக்கின்றன; அவற்றின் போக்கிலேயே அனுமதித்து, மாறுதல் செய்து, புதிய வழிமுறைகளை அவர்கள் கற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன.
இது விரிவாக அலசப்பட வேண்டிய விஷயம். ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் ஏன் பெற்றோர்களும் கூட இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment