About Me

Monday, September 26, 2011

நெட் தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி

தேசிய அளவில் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கான "நெட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி தேதியாகும்.ஆண்டுதோறும், இந்தத் தகுதித் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி "நெட்' தேர்வு நடத்தப்பட்டது. இப்போது டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். www.ugc.ac.in  என்ற இணைய தளத்தில் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் அக்டோபர் 25-க்குள் விண்ணப்பித்த பின்னர், அந்த விண்ணப்பப் படிவம், அனுமதி படிவம், வருகைப் படிவம் ஆகியவற்றை பிரதி எடுத்து, விண்ணப்பதாரர் தேர்வு செய்துள்ள தேர்வு மையத்தில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் நேரில் தர வேண்டும்.
 
thanks. kalvisolai.com

No comments: