About Me

Sunday, September 4, 2011

விடா முயற்சி வெற்றி பெறும்: சுகிசிவம்

ஞாயிற்றுக்கிழமை, 4, செப்டம்பர் 2011 (11:3 IST)

விடா முயற்சி வெற்றி பெறும்: சுகிசிவம்


விக்கிரவாண்டியில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சொற்பொழிவாளர் சுகிசிவம்,

ஒரு மாணவன் தனது 16 வயது பருவ மாற்றங்களை எளிதில் வெற்றி பெறுபவன் வாழ்க்கையில் சாதனைகளை படைக்க முடியும் அழகு எவ்வளவு மேன்மையானதோ அதிக அளவு ஆபத்து நிறைந்தது.

பெரிய தலைவர்கள், விஞ்ஞானிகள் வரை மொழியை தவறாக பேசியவர்கள் தான் நாம் தயக்கமின்றி பேசும் போது தவறுகள் திருந்தும். நீங்கள் படித்து உழைத்து அதன் மூலம் வாங்கும் முதல் பொருள் விலை உயர்ந்தது. நீங்கள் மனதையும், உடலையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பலம் உள்ளவன் வெற்றிபெற முடியாது விடா முயற்சி வெற்றி பெறும். படிப்பு வராது என பள்ளியில் இருந்து விரட்டப்பட்டவன் தான் தன் அம்மாவிடம் கல்வி கற்று வெற்றி பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன்' அவரது விடாமுயற்சி வெற்றி பெற்றது.

எவன் ஒருவன் எனக்கு வராது என்று தனது எல்லையை நிர்ணயம் செய்கின்றானோ அவன் அதில் இருந்து மீள முடியாது. உளி கொண்டு வலியுடன் செதுக்கும் சிலைதான் கோவில்களில் அனைவரும் வணங்கும் தெய்வமாக திகழ்கின்றது. வலியின்றி பிளக்கும் கற்கள், படிகற்களாக மாறுகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளின் திறமை எது என உணர்ந்து அதை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும். அதை விடுத்து பெற்றோர்களின் ஆசைகளை திணிக்க கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் உறவு என்ற அணுகுமுறையில் கல்வியை கற்றால் மாணவர்களின் கல்வி தரம் உயரும். கல்லூரிகளின் தரம் உயரும். இவ்வாறு சுகிசிவம் பேசினார்.


Home Page

Home Page Thanks : Nakkeeran




1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு.

சுகி சிவம் அவர்கள் நல்ல சமயசொற்பொழிவாற்றுவதுடன், தன்னம்பிக்கையளிக்கும்விதமாக பேசும் திறன் கொண்டவர்.