About Me

Tuesday, September 20, 2011

உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னரேஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம்

சிவகங்கை:"கவுன்சிலிங்' முடிந்து உத்தரவு பெற்றாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் தான், ஆசிரியர்கள் பணியிடமாற்றம், பதவி உயர்வு செய்யப்பட உள்ளனர்.உள்ளாட்சித் தேர்தல், அக்டோபரில் நடக்கவுள்ளது. ஓட்டுச்சாவடி பணிகளுக்கு, 70 சதவீதம் ஆசிரியர்களே பயன்படுத்தப்படுவர். அவர்களுக்கு, வாக்காளர்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் விவரங்களை சேகரித்தல் பணி வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, உதவி தேர்தல் அலுவலர் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.* கவுன்சிலிங்: அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை மற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கான, "கவுன்சிலிங்' கடந்த, 16ல் இருந்து நடக்கிறது.

இன்றுடன் கவுன்சிலிங் முடியும் நிலையில், கடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, எந்த தேதிக்குள் மாற்றுப்பள்ளிகளில் பணி ஏற்க வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவர். இச்சூழலில் ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கினால், உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் மாறுதல் தேதியை குறிப்பிடவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

* கவுன்சிலிங்கில் முறைகேடு புகார்: விருதுநகர் டி.பி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 17 ஆசிரியர் காலிப் பணியிடங்களில், இரண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களே காட்டப்பட்டன. இதுவும் பார்வையற்றோர் ஒதுக்கீட்டில் இருந்ததால், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியுற்றனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு வந்த பட்டதாரி ஆசிரியர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர். ஒரு மணி நேரம் போராட்டம் நடந்தது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் கூறுகையில், "" ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்து காலிப்பணியிடங்களை காட்டிய பின் , கவுன்சிலிங் நடத்த வேண்டும். ஏற்கனவே பல ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கவுன்சிலிங்கிலும் காலிப் பணியிடங்கள் மறைப்பதால், மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: