சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரங்களை, தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுக்கான 25 மதிப்பெண்கள், பகுதி வாரியாகப் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
சமச்சீர் கல்வித் திட்டத்தில், அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்த, அரசாணை வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வித் திட்டத்தில், அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்த, அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், கருத்தியல் தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள் (தியரி) மற்றும் செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, அரசு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.
* அதன்படி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு, இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இயல் அறிவியல் பிரிவுக்கு ஒரு மணி நேரம் 15 நிமிடமும், உயிர் அறிவியல் பிரிவுக்கு, ஒரு மணி நேரம் 15 நிமிடமும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மாற்றுத் திறனுடைய மாணவர்கள், உரிய ஆய்வு அலுவலர்களின் அனுமதியுடன், தாங்கள் சொல்லி, மற்றவர்கள் எழுதும் வகையில், ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அல்லது, மாற்றுத் திறன் உடைய மாணவர்கள் விரும்பினால், அவர்கள் கருத்தியல் தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை, 100க்கு மாற்றி, வேறுபாட்டை செய்முறைத் தேர்வு மதிப்பெண்களாகக் கணக்கில் கொள்ளலாம்.
* சனிக் கிழமைகளில், செய்முறைத் தேர்வுகள் நடைபெற வேண்டும். செய்முறைத் தேர்வு செய்ய, 80 சதவீதம் வருகைப் பதிவேடு இருக்க வேண்டும். இதில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கலாம்.
செய்முறைத் தேர்வு கேள்விகள்:
* இயல் அறிவியலில், இயற்பியலில் ஒரு கேள்வியும், வேதியியலில் ஒரு கேள்வியும் இடம்பெறும். இதற்கு, தலா 5 மதிப்பெண்கள் வீதம், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* உயிர் அறிவியலில், தாவரவியல் பிரிவில் இருந்து ஒரு கேள்வியும், விலங்கியலில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். இதற்கு, தலா 5 மதிப்பெண்கள் வீதம், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.* மாணவர்களின் ஆய்வுக்கூட வருகைக்கு 1 மதிப்பெண், ஆய்வக செயல் திறனுக்கு 1 மதிப்பெண், ஆய்வக ஈடுபாட்டுக்கு 1 மதிப்பெண் மற்றும் ஆய்வகப் பதிவு குறிப்பேட்டுக்கு 2 மதிப்பெண்கள் என, மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு செய்வது எப்படி?"கேள்விகளை, செய்முறை ஆய்வுக் கையேடு உள்ள தொகுப்பில் இருந்து, மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம். கணக்கீடு கேள்விகளுக்கு, ஒரு கணக்கீடு எடுத்தால் போதும்' என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks : kalvisolai
No comments:
Post a Comment