(25 Sep) புதுதில்லி, செப்.25: தேவையற்ற செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தவிர்க்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு சிம்கார்டில் இருந்து ஒருநாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மட்டும்தான் அனுப்ப முடியும் என கட்டுப்பாடு விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது. ஒரு சிம்கார்டில் இருந்து 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற பரிந்துரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என டிராய் வட்டாரங்கள் தெரிவித்தன. 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 27-ம் தேதியில் இருந்து அமலுக்கு
வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தீபாவளி போன்ற விழாக் காலங்களில் இந்த கட்டுப்பாடு இருக்காது என டிராய் வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தீபாவளி போன்ற விழாக் காலங்களில் இந்த கட்டுப்பாடு இருக்காது என டிராய் வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment