About Me

Sunday, September 4, 2011

ஆசிரியர் தினம் ‍- ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் முதல்வர்,கவர்னர்,முன்னால் முதல்வர்

முதல்வரின் ஆசிரியர் தின வாழ்த்து



சென்னை, செப்.4: நாளை செப்.5ம் தேதி ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்து வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,ஆசிரியராகப் பணிபுரிந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம்.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்குஎழுமையும் ஏமாப் புடைத்துஎன்பது வள்ளுவன் வாக்கு. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும்  என்று வள்ளுவர் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்தது.ஆசிரியர் தினமான இந்நாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரிய பணியைப் பாராட்டி சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை அரசு வழங்குகிறது. இக்கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப்  பெருமக்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.தமிழக அரசின் அரிய பல கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் துணை நின்று, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் பணி மேலும் மேலும் சிறந்திட ஆசிரியர் தின வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   

ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌ம்: ஆளுந‌ர் ரோசையா வா‌ழ்‌த்து

செ‌ப்ட‌ம்ப‌ர் 5ஆ‌ம் தே‌தி ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌‌த்தை மு‌ன்‌னி‌ட்டு த‌மிழக‌த்‌தி‌ன் பு‌திய ஆளுந‌ராக பொறு‌ப்பே‌ற்று‌ள்ள ரோசையா ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு தனது வா‌ழ்‌த்து‌களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல்,

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுகிறோம். தரமான கல்வியானது தரமான ஆசிரியர்களை சார்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் தங்களது ஆன்மாவையும், இதயத்தையும் தரமான கல்வியை அளிக்கவும் மாணவர்களை சிறந்த குடி மகன்களாக உருவாக்கவும் அர்ப்பணிக்க வேண்டும்.

சமூகத்தில் ஆசிரியர்கள் செயல்கள் மற்றும் நடத்தைகளால் முன்மாதிரியாக திகழ வேண்டும். இந்த நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று ஆளுந‌ர் ரோசையா கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர். 

ஆசிரியர் தினம்: கருணாநிதி வாழ்த்து



சென்னை, செப்.4: நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆசிரியப் பணிபுரிந்து புகழ்குவித்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணியாற்றிடும் ஆசிரியர்களுக்கு அந்நாளில் நல்லாசிரியர் விருது என வழங்கப்பட்ட பெயரினை மாற்றி அனைத்து ஆசிரியர்களும் மகிழும் வகையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என வழங்கிட ஆணையிட்டதை இந்த ஆசிரியர் தினத்தில் நினைவுகூறுகிறேன். ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும் எனப் பேரறிஞர் அண்ணா கூறிய மொழிகளை நினைவில் கொண்டு, தி.மு.க. அரசு அமையும் காலங்களில் எல்லாம் ஆசிரியர்களின் சமூக பொருளாதார நிலைகளை உயர்த்திடும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு, ஆசிரியர் குடும்பங்கள் பயடைந்துள்ளதை அனைவரும் அறிவர்.மாணவ-மாணவியர் நமது தமிழ்நாட்டுச் செல்வங்கள், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு நமது தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு எனும் உணர்வோடு, சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு சீரிய முறையில் பாடங்களைக் கற்பித்திட வேண்டுமென அருமை ஆசிரிய நண்பர்கள், அனைவரையும் அன்போடு கேட்டுக்கொண்டு, தமிழக ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் என கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:

No comments: