About Me

Monday, September 26, 2011

பண்டைக்கால கட்டட ஆராய்ச்சிக்காக ஜப்பான் மாணவர்கள் வருகை

கீழக்கரை: ஜப்பான் பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள், கீழக்கரை பகுதியில் பழமை வாய்ந்த கோவில், பள்ளிவாசல் கட்டடங்களை ஆராய்ச்சி செய்தனர்.ஜப்பான் பல்கலை பேராசிரியர் சூயமானே தலைமையில், புக்காமி நவோக்கா ஆராய்ச்சியாளர் சுசூகி மற்றும் மாணவர்கள் யுனிஸி ஸின்யே,ஹேஹக்கி,டெட்சூ ஆகியோர் கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசல் கட்டடங்கள், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள கோவில் கட்டடங்கள், சிற்பங்களை ஆய்வு செய்தனர்.

பேராசிரியர் சூ யமானே கூறியதாவது;ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், கீழக்கரையில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசல் உட்பட பல்வேறு கட்டடங்கள், சரித்திர சான்றுகள்
எங்களை பிரமிக்க வைக்கின்றன. ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோவில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளன. தமிழக மக்கள் அன்புடன் உபசரித்து தேவையான விளக்கங்களை அளித்தனர்.முன்னதாக, ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், தர்கா ஹக்தார் துல்கருணை பாட்சா, நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் வரவேற்றனர். ஏற்பாடுகளை, தொல்பொருள் ஆய்வாளர் அபுசாலிகு செய்தார்.

No comments: